உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

223

மகா-ள-ல-ஸ்ரீ பாண்டித்துரை ஸாமித் தேவரவர்களுடைய பெருந்தகைமை பாராட்டற் பாலது; தம்முடைய சமீன் சம்பந்தமாகவுள்ள காரியங்கள் எவ்வளவோ இருந்தும் அவற்றைச் சிறிதும் மதியாமல் தமிழ்ச்சங்கத்தின் சம்பந்தமான காரியங்களையே அவர்கள் எப்பொழுதும் கவனித்து

வருவதாகவும் தெரிகிறது.

"கவர்ண்மெண்டாரும், இத்தமிழ் நாட்டைச் சார்ந்த அரசர்களும், பிரபுக்களும், உத்தியோகஸ்தர்களும், மற்றவர் களும் கவனித்துச் சங்கத்தின் சம்பந்தமான பொருட்செலவு முதலியவற்றில் மகா-ள--ஸ்ரீ பாண்டித்துரைஸாமித் தேவரவர் களுக்கு அதிகக் கவலை வையாமற் சங்கத்தின் அபிவிருத்தியைக் கருதிப் பொருளுதவி செய்வார்களாயின், இக்காலத்தில் நிரம்ப உபகாரமாக இருக்கும்."

"இவ்வரிய காரியத்தை மேற்கொண்டு இடைவிடாமல் உழைத்தவரும் அக்கிராசனாதிபதி அவர்களுடைய மனத்திற்கு யாதொரு கவலையும் பாதுகாத்

உண்டாககாவண்ணம்

தருளும்படி ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரரேசுவரருடைய திருவடிகளைச் சிந்திக்கின்றேன்."

சென்னை

இங்ஙனம்,

10-10-1905

வே. சாமிநாதையன்

Tamil Pandit,

Presidency College, Madras.

எழுதியவர் தகுதியும், எழுதப் பெற்ற செய்திகளின் தகுதியும், அந்நாளைத் தமிழ்ச்சங்கச் செயல் மாண்பினையும், வளர்ச்சித் திறங்களையும் செவ்வையின் விளக்குகின்றன. ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்தியை இத்தகைய அகச் சான்றுகள் தாமே நிறுவிக் காட்ட வல்லனவாம்.