உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

239

கொள்ளப் பெற்ற ஒருவர் திரு. நாராயண ஐயங்கார். பேரறிஞராய் அவர், முகவையிலேயே பாண்டித்துரையின் அவைப்புலவராக விளங்கினார். சங்கந் தொடங்கிய நாளில் சங்கக் கலாசாலையின் தலைமையாசிரியராக அமர்த்தப் பெற்று அரும்பணி செய்தார். அதன் பின்னர்ச் செந்தமிழ் ஆசிரியராகவும் பல்லாண்டுகள் கடனாற்றினார். அத்தகையவர் பணித் தகவைப் பாராட்ட வேண்டுமெனச் சங்கப் பொறுப்பாளர்கள் கருதினர்.

மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 33ஆம் ஆண்டு விழா பவ ஆண்டு ஆடித்திங்கள் 31ஆம் நாள் (15-8-1934) நிகழ்ந்தது. சண்முக ராசேசுவர நாகநாத சேதுபதி அவர்கள் வரவேற்புரைக்க, சென்னை, ஆளுநர் கான்பகதூர் சர். முகம்மது உசுமான்சாகிப் பகதூர்அவர்கள் தலைமை ஏற்றனர். சென்னை, வளர்ச்சித்துறை அமைச்சர் பி.டி. இராசன் அவர்கள் முத்துராமலிங்க சேது பதியவர்களின் பணி நலம் பாராட்டி அவர் படத்தைத் திறந்து வைத்தனர்.

பின்னர்த் திரு. நாராயண ஐயங்கார் அவர்கள் ஆற்றிய அரும் பணியைக் கருதிய பெருமக்கள் வழங்கிய ரூ.1500-க்கு மேற்பட்ட பொற்கிழியையும் பொன்னாடையையும் நாவலர் சோமசுந்தரபாரதியார் சங்கத் தலைவர் சேதுபதி அவர் களிடம் வழங்கினார். சேது வேந்தரவர்கள், அவைத்தலைவர் அவர்கள் வழியே பேராசிரியர்க்கு வழங்கச் செய்தார். அரும்பணியை ஈடுசெய்யும் பொருட்கொடை ஒன்றில்லை எனினும், அவ்வுதவி அவர்க்குக் காலத்தால் செய்யத்தக்கதாக இருந்தது என்பது பாராட்டத் தக்கதாம்.

மேலும் அத்தலைமையாசிரியர் அகவை முதிர்வால் தம் கடமையை ஒல்லும் வகையால் செய்ய இயலாத் தளர்வுற்ற காலையில் தமிழ்ச்சங்கம் இரங்கியது. அதனால் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12 ஆம் நாள் (விசு. பங்குனி 30) இராமநாத புரத்தில் சேதுபதி அவர்கள் தலைமையில் கூடிய செயற்குழுவில் திரு, நாராயண ஐயங்கார்க்கு உதவும் முடிவொன்று எடுக்கப் பெற்றது:

தீர்மானம் X. சங்கத்தின் கௌரவ காரியதரிசியவர்களின் மெமோ படிக்கப் பெற்றது. ஸ்ரீ திரு. நாராயணையங்கார வர்களுக்கு 1940 ஆம் வருஷத்திற் பாக்கி மாதங்களுக்குச் சம்பளமாக ரூ.200 கொடுப்பதுடன் 1941 ஆம் வருஷம் முதல் ஒவ்வொரு வருஷமும் ரூ. 350 Honorarium (கெளரவச் சம்பளம்) கொடுத்து வரவேணுமென்று தீர்மானிக்கலாயிற்று. அவர்கள்