உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

ஏந்திய கையை மாய்ந்திடச் செய்யேல்.

-

மாய்ந்திட அழிந்துபட.

ஐப்பசி விதைநெல் அவலுக்கும் ஆகா.

ஐப்பசித் திங்களில் விளைகின்ற நெல் அவல் செய்யக் கூட ஆகாது. 'ஒம்போம்' எனும் சங்கொலி உணர்.

ஒம்போம் -ஊர் அழப்போகும்; சங்கொலி - இறந்தாரை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லுங் கால் ஒலிக்கும் சங்கு; 'நிலையாமையை நினை' என்பது கருத்து.

ஓய்ந்தோய்ந் தாய்ந்து தோய்ந்திடச் செய்.

ஓய்ந்து ஓய்ந்து ஆய்ந்து தோய்ந்திட - முழுமனத்துடன்.

-

ஒளர்வர் போலத் தவம்புரிந் தொழுகு.

ஆர அமர ஆராய்ந்து;

ஒளர்வர் போல - நீரையே பருகித் தவம் செய்வார் போல.

அஃறொழில் செய்து பகடூண் இழவேல்.

அஃறொழில் (அல்தொழில்) - கீழான செயல்; பகடு ஊண் வேளாண்மையால் வந்த உணவை.

ஒவ்வா(து) உரைக்கின் துவ்வாது ஆகும்.

-

ஒவ்வாது அறத்திற்குப் பொருந்தாது; துவ்வாது உண்பதற்கும் வழியற்ற வறுமை.

ஏழ்மெய்யும் உடைக்கும் ஆழ்மெய் யுணர்ச்சி.

ஏழ்மெய் ழுகடல்; (புல் பூடு முதலாக வரும் ஏழுபிறப்பின் உடல்கள் ஆழ் - ஆழ்ந்த; நிரம்பிய.

எள்ளினும் எள்ளார் கள்ளம் உடையார்.

எள்ளினும் எள்ளார் எள்ளைக் காட்டிலும் சிறிய என்போன்ற சிறியவர்; கள்ளம் வஞ்சம்.

ஆற்றடி சுடினும் ஊற்றுல கூட்டும்.

ஊற்று உலகு ஊட்டும் - ஊற்று தன் நீரால் உலகோரை உண்ணச் செய்யும்.