146
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
(அ - ள்) கார் - மேகம்; மஞ்ஞை - மயில்; கதித்து - விரைந்து; மதி - திங்கள்; வசந்தகாலம் - இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி); பேர்பெறு குலம் -புகழ்வாய்ந்த நற்குடி.
கொலைக் குற்றத்திற்கு ஒப்பானவை
(99)
100. சோதிடம் சொல்லு வோனும், தொல்வழக் குரைப்போன் தானும் பேதமாய் எவற்றிற் கேனும் +பிராச்சித்தம் விதிக்கின் றோனும் நீதமாய் வயித்தி யங்கள் நிகழ்த்திடு வோனும், நூலின்
சோதனை தப்பிச் செய்தால் பிரமத்தி தோசம் சேரும்.
-
-
(அ ள்) தொல்வழக்கு பழமையான வழக்குகள்; பேதமாய் - மாறுபாடாய்; பிராச்சிதம் (பிராயச்சித்தம்) விலக்காகும் வகை; நீதமாய் - முறையாய்; நூலின் சோதனை தப்பி நூலை ஆராய்ந்த முறைமை தவறி; பிரமகத்தி தோசம் பிராமணனைக் கொன்ற பாவம்; சேரும் -வந்துசேரும்.(100)
நீதிசாரம் அருஞ்சொற் பொருளுடன்
முற்றிற்று.
+ பெருங்கழு வாய்சொல் வோனும்.
பா வே-99
-
கார்தனைக் கண்ட மஞ்ஞை கதித்தெழுந் தாடல் போலும்
ஏர்பெறு மதியைக் கண்டால் ஆம்பலும் மலர்தல் போலும் சார்வுறு வசந்த காலம் தழைத்திடும் அடவி போலும் சீர்பெறு குலத்தில் வாழும் செல்வர்க்கா சாரம் சேரும்.