உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

19

வேங்கடசாமி அவர்கள் எழுதிய அனைத்தையும் அச்சில் கொண்டுவர வேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டுவருகிறார். அங்ஙனமே இதனைக் கழகவழி வெளியிட இசைவளித்த நூலாசிரியரின் பேத்திமார் ம. அழகம்மாள், ம. அன்புமணி ஆகிய இருவர்க்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். பல கல்வெட்டுக்களின் மூலப்படியைப் படியெடுக்க உதவியவை South In- dian Paleography, கல்வெட்டுக் கருத்தரங்கு ஆகிய நூல்களாகும். இரு கல்வெட்டுக்களின் மூலப்படியைப் பெற்றுத் தந்த திரு. கொடுமுடி சண்முகம் அவர்கட்கும் எம் நன்றி உரித்தாகுக.

ஆக்கியோர் மறைவுக்குப்பின் வெளிவரும் (Posthumous edition) இதனை, நூலகங்களும் ஆராய்ச்சி மாணவர்களும் வாங்கிப் பயன்படுத்துவதே இந் நூலாசியருக்குக் காட்டும் நன்றிக் கடனாகும்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்