உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

97

கள் படித்துப் பொருள் கூறியதைப் பார்ப்போம். திரு.எச்.கிருட்டிண சாத்திரி இதைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்:

பாளிய

நடிஞ

.7

காணிய ந(ா)ந தாஸிரியகு அனா பாம இ தா ந டி ஞ சாட்டியனா ஸால(ா) கானா ஈஸாஞ் சாடிகானா தாந்தைய சாடிகான செஇயா

இவ்வாறு படித்த இவர் ழியை ட்டி என்று படித்துள்ளார். சாழியன் என்பதைச் சாட்டிகன் என்று படித்து, இஃது இக் கல் வெட்டில் இரண்டு இடங்களில் வருகிற சாடிகன் என்பதன் வேறு வடிவம் என்று கூறுகிறார். கடைசியில் வருகிற செயிய என்பது சைத்யானி என்னுஞ் சொல்லின் திரிபு என்கிறார். இறுதியில் இருக்கிற பாளிய் என்பது பால்ய என்னுஞ் சொல்லின் திரிபு என்கிறார்.

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்தக் கல்வெட் ழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்:8

“கா ணியன் நடா ஸிரி யகு அன தமாம இதர நடிஞ்

சாறியன் ஸாலாகன் இளஞ்சாறிகன் தாந்தைய்

சாறிகான் செ இய பாளிய்”

காணியன் என்பது கரணியன். கரணியன் என்பது அநுலோம (கலப்பு) சாதியைக் குறிக்கிறது. நடா என்பது நாத (தலைவன்) என்னும் பொருள் உள்ள சொல். யகுஅன் என்பது யக்ஷன் என்னுஞ் சமற்கிருதச் சொல். பாளிய் என்பது பாழி.

66

கரணி குலத்தில் பிறந்த புகழ்பெற்ற தலைவனான ஸ்ரீயக்ஷன் இந்தத் தருமத்தைச் செய்தான். இந்தச் சத்தியியத்தை அமைத்தவன் நெடுஞ்சாறிகளின் மைத்துனனும் (சட்டகன்) இளஞ்சாறிகளின் தந்தையுமான சாடிகன்.

திரு.சி. நாராயண ராவ் இந்தக் கல்வெட்டெழுத்தைப் பிராகிருத மொழி என்று தவறாகக் கருதிக்கொண்டு முதலில் பிராகிருதமாகப் படிக்கிறார். பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமற்கிருதமாக

அமைக்கிறார்.9

66

காணிய நா நதா ஸிரியகு அநா காமம்

இதர நடிஞா சாட்டியந ஸ் இயகா நா இளாந