உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

-

கடல் நட்சத்திரத்தில் (சதய நட்சத்திரத்தில்) பிறந்தவன் என்றும் கொள்ளலாம். கடல் நட்சத்திரம், கடல் தெய்வமாகிய வருணனுடன் தொடர்புள்ளது. பிறந்த நட்சத்திரத்தின் பெயரை அரசர்களுக்கு இடுவது வழக்கம். வழுதி என்பது பாண்டியருக்குரிய சிறப்புப் பெயர். இவ்வாறு இவர் இந்தக் கல்வெட்டெழுத்துக்கு இரண்டு பொருள்களைக் கூறுகிறார். கணியன் நந்தி ஆசிரியருக்கு நெடுஞ்செழியனுடைய பணயன் (ஊழியன்) ஆன கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது ஒரு பொருள். நெடுஞ்செழியன் பஞ்சவன் கடலன் வழுதி என்னும் பெயருள்ள பாண்டியன், கணி நந்தி ஆசிரியர்க்கு இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது இன்னொரு பொருள்.

இந்தப் பிராமிக் கவ்வெட்டெழுத்தை நாம் படித்துப் பொருள் காண்போம். பட்டிப் பரோலு எழுத்தின் வாய்பாட்டுப்படி நெட்டெழுத்துக்களைக் குற்றெழுத்தாகக் கொண்டு படித்தால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது:

66

கணிதி நந்த அஸிரிய் இகுவ் அன்கெ தம்மம்

ஈத்தா நெடுஞ்செழியன் பணஅன் கடலஅன்

வழுத்திய் கொட்டுபித்த அ பளிஇய்

இந்தக் கல்வெட்டின் கருத்தைக் கூறுவதற்கு முன்பு இதிலுள்ள சொற்களை விளக்க வேண்டியிருக்கிறது.

கணிய்: இந்தச் சொல்லை முன் கல்வெட்டில் விளக்கினோம். மறுபடியும் இங்கு விளக்கவேண்டியதில்லை. நந்த அஸிரிய் நந்தி ஆசிரியர் என்பதை இவ்வாறு எழுதியுள்ளார். இதுவும் முன்னமே விளக்கப்பட்டது. இகுவ் அனகே. இதன் சரியான உருவம் தெரிய வில்லை. ‘இவனுக்கு’ ‘இவனுக்குரிய' என்னும் பொருளுள்ளதாகத் தோன்றுகிறது. தம்மம் : இது பாலி (பிராகிருத) மொழிச் சொல். சமற்கிருதத்தில் இது தர்மம் என்று எழுதப்படும். இதன் பொருள் அறம் என்பது. இந்தச் சொல் கல்வெட்டில் தமம் என்று எழுதப்பட்டுள்ளது. ஈத்தா அ நெடுஞ்சழியன்: ஈத்தான் நெடுஞ்செழியன்' என்று எழுத வேண்டியது இவ்வாறு எழுதப் பட்டுள்ளது. ஈத்தான் ஈந்தவன், கொடுத்தவன். செழியன் என்பது சழியன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. செழியன் என்பது பாண்டியனுடைய பெயர். பணஅன் என்பது பணயன் என்று எழுதப்படவேண்டும். பணயன் என்றும் பணயகாரன் என்றும்

-

முன்