உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

103

பாண்டியரின் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும், எழுதப் பட்டுள்ளன. பணயன் என்பதன் பொருள் அரசருடைய தச்சன் என்பது. அரசருடைய தச்சனைப் பெருந்தச்சன் என்றும் கூறுவர். இச் சொல் இங்குப் பாண்டியனுடைய கற்றச்சனைக் குறிக்கிறது. பாண்டியனுடைய கற்றச்சன் இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்தவன். கடலன் என்பது பணயனான கற்றச்சனுடைய இயற்பெயர். கடலன் என்னும் பெயர் சங்க காலத்தில் பெயராக வழங்கப்பட்டது. எருமை வெளியனார் மகனார் கடலனார் என்னும் புலவர் சங்க காலத்தில் இருந்தார். அவர் அகநானூறு 72ஆம் செய்யுளைப் பாடினவர். வழுத்தி என்பது வழுதி என்றிருக்க வேண்டும். வழுதி என்பது பாண்டியரின் பொதுப் பெயர். பாண்டியன், பணயன் கடலனாகிய கற்றச்சனுக்கு வழுதி என்று சிறப்புப் பெயர் அளித்திருந்தான் என்பது தெரிகிறது. கொட்டு பித்த அ என்பது கொத்துவித்த (பாறையைக் கொத்திக் கற்படுக்கையைச் செய்வித்த) என்னும் பொருளுடையது. இறுதியில் அகர எழுத்து மிகையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இச் சொல் கொத்துவித்த ச் என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பளிஇய் என்பது பள்ளி என்று எழுதப்படவேண்டும். கற்றச்சன் இவ்வாறு எழுத்துக்களை விட்டும் சேர்த்தும் வெட்டியிருக்கிறான்.

சோதிடத்தில் வல்லவரான அரச குருவாகிய நந்தி ஆசிரியருக்கு இந்த மலை தானமாகக் கொடுக்கப்பட்டது. இதைத் தானங் கொடுத்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். பாண்டியனுடைய பணயனாகிய கடலன் வழுதி இக் குகையில் கற்படுக்கைகளைக் கொத்துவித்தான் என்பது இக் கல்வெட்டின் கருத்து.

இந்த இரண்டு கல்வெட்டுக்களிலிருந்து அறியப்படுவது: ஆசிரியராகிய (குருவாகிய) கணி நந்தி என்பவருக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இரண்டு மலைக்குகைகளைத் தானஞ் செய்தான். இரண்டு குகைகளைத் தானஞ் செய்தபடியாலே, அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர் என்பது தெரிகிறது. நெடுஞ்செழியனுடைய சேனைத் தலைவனுடைய தந்தை யான சடிகன் முதற் குகையில் கற்படுக்கைகளைச் செய்வித்தான். பாண்டியனின் பணயகாரனாகிய கடலன் வழுதி இரண்டாவது குகையில் கற்படுக்கைகளைச் செய்வித்தான்.