உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

109

இதற்கு விளக்கம் வருமாறு: இவ் என்பது வருமாறு: இவ் என்பது இவை என்னும் பொருள் உள்ள சொல். இச்சொல் குன்றின் மேலுள்ள குகையையும், அதற்குள் உள்ள கற்படுக்கைகளையும், குன்றின் கீழேயுள்ள ஏரியையும் சுட்டுகிறது. குன்றதூ: இதன் பொருள் குன்றத்து என்பது. கடைசி எழுத்து து என்றிருக்க வேண்டியது. தூ என்று எழுதப்பட்டுள்ளது. த்து என்று தகர ஒற்றெழுத்து விடுபட்டிருக்கிறது. வேறு சில பிராமிக் கல்வெட்டுக்களிலும் இவ்வாறே தகர ஒற்றெழுத்து விடுபட்டிருக்கிறது. இதை த்து என்று படிப்பதுதான் வாக்கிய அமைதிக்குப் பொருந்துகிறது. உறையுள் என்பது வசிக்கும் இடம் என்னும் பொருள் உள்ள சொல். உறையுள் என்பது இங்கு இம்மலையில் இருந்த முனிவர்கள் குகையைச் சுட்டுகிறது. அடுத்துள்ள உதன் என்பது சுட்டெழுத்து. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்களில் அகரம் (உது) நடுவில் (இடையில்) உள்ள பொருளைச் சுட்டுகிறது, என்பது இலக்கணம். இந்த இலக்கணப்படி 'உதன் என்பது இடையிலுள்ள என்னும் பொருள் உள்ள சொல். இச் சொல் ஏரியைச் சுட்டுகிறது. ஏரி என்பது நீர்நிலையைக் குறிக்கிறது. இந்த யானை மலையின் உச்சியில் குகைக்கு அருகில் நீரூற்றுச்சுனை இருக்கிறது என்று முன்னமே அறிந்தோம். கவ்வெட்டு கூறுகிற ஏரி, இந்தச் சுனை அன்று. மலையில் அடிவாரத்தில் இருந்த ஏரியைக் குறிக்கிறது.

குன்றத்தைச் சார்ந்த உறையுளையும் (குகையையும்) குன்றத்தைச் சார்ந்த (அடிவாரத்தில்) இருந்த ஏரியையும் ஆக இரண்டையும் முனிவர்களுக்குத் தானம் செய்தார்கள். இவ்விரண்டு பொருள்களை யும் குறிக்கவே ‘இவ்' என்னும் சொல் பன்மையில் குறிக்கப்பட்டது. இச் சொல் குன்றத்தை மட்டும் குறிப்பதாக இருந்தால் ‘இக் குன்றத்து என்று ஒருமையில் எழுதப்பட்டிருக்கும். ‘இவ்' என்று இருப்பதனால் இச் சொல் குகையை (உறையுளை)யும் ஏரியையும் குறிக்கிறது என்பது தெளிவு. உறையுளைத் தானங் கொடுத்தது சரி, ஆனால் ஏரியை ஏன் துறவிகளுக்குத் தானங் கொடுத்தார்கள் என்று ஐயம் உண்டாகலாம். முனிவர்களின் உணவுக்காகத் தானியம் பயிர் செய்வதற்கு இந்த ஏரி தானம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இலங்கையில் ஒரு குகையில் உள்ள பிராமிக் கல்வெட்டு ஒன்று, மலைக் குகையையும் அதன் கீழுள்ள ஏரியையும் தானம் செய்ததைக் கூறுகிறது. பருப்பு களைப் பயிர் செய்வதற்கு அந்த ஏரியைத் தானம் செய்துள்ளனர். அதுபோன்ற இந்த மலையை அடுத்துள்ள ஏரி தானியம் பயிர் செய்யத்