உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

127

என்பது யாகம் என்னும் பொருள் உடைய சொல் என்றும், வேளிர், வேள்வித் தீயில் இருந்து வந்தவர் என்று செவிவழிச் செய்தியுண்டு என்றும் கூறுகிறார். வேளிர் எல்லோரும் யாகத் தீயில் இருந்து வந்தவர் அல்லர். துவரை (துவாரசமுத்திரம்) யையாண்ட புலிகடிமா வேளிரும், இருங்கோ வேள் பரம்பரையும் வேள்வித் தீயில் இருந்து வந்தவர் என்று கூறுப்பட்டனரே தவிர எல்லா வேளிரும் வேள்வியில் இருந்து தோன்றவில்லை. பகாப்பதமாகிய கஞ்சண என்பதை இவர் கம்+சணம் என்று பிரித்துக் கம் என்பதற்கு கம்மியர், கம்மாளர் என்றும், சணம் என்பதற்குச் சயனம் (படுக்கை) என்றும் பொருள் கூறுவது குத்திரயுக்தியாக இருக்கிறதே தவிர ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

ம்

திரு. ஐ. மகாதேவன், இந்தச் சாசனத்தைச் சரியாகவே படித்திருக் கிறார். ஆனால், இவர், வேண் காசிபன் என்பதை வேன்காசிபன் என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது.

இனி, இந்தப் பிராமி எழுத்து வாசகத்தை நாம் படித்து பொருள் காண்போம்.

வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம்

என்று இதைப் படிக்கிறோம். இதனை விளக்கிக் கூறுவோம். முதற்சொல் வெண் என்பது. பிராமி எழுத்தில் எகரமும் ஐகாரமும் ஒரே மாதிரி எழுதப்படுகிறது. இதை வெண் என்றும் வேண் என்றும் படிக்கலாம். மேலே கூறப்பட்ட அறிஞர்கள் இதை ‘வேண்' என்று படித்துள்ளனர். ஆனால் ‘வெண்' என்று படிப்பதே இந்த இடத்துக்குப் பெரிதும் பொருந்து கிறது. முதல் ஆறு எழுத்துக்களையும் 'வெண்காசிபன்' என்று படிக்கலாம். சங்ககாலத்தில் வெண் என்னும் தொடக்கத்தை யுடையவர் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். வெண்கண்ண னார், வெண் கொற்றனார், வெண்பூதனார், வெண்பூதியார், வெண்மணிப்பூதியார் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம்.

வெண்கண்ணனார் அகநானூறு 130, 192ஆம் செய்யுள்களைப் பாடிய புலவர். வெண்கொற்றனார் குறுந்தொகை 86ஆம் செய்யுளைப் பாடிய புலவர். வெண்பூதனார் குறுந்தொகை 83ஆம் செய்யுளைப் பாடியவர். வெண்பூதியார் குறுந்தொகை 97, 174, 219 ஆம் செய்யுள்களைப் பாடியவர். வெண்மணிப்பூதியார் குறுந்தொகை 299 ஆம் செய்யுள்களைப் பாடியவர். ஆகையால், இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தில் கூறப்படுபவரை கூறப்படுபவரை வெண்காசிபன் என்று