உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

குறிப்பிடுகிறார். செல்வக்கடுக்கோ வாழியாதனுடைய தந்தையின் பெயர் அந்துவன் பொறையன்.

நல்லந்துவனார் கடைச்சங்க காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டில்) இருந்த பெரும் புலவர். இவர் பாடின செய்யுள்கள் சங்க இலக்கியங்களில் 10 தொகுக்கப்பட்டுள்ளன. கலித்தொகையைத் தொகுத்தவரும் நல்லந்துவனாரே. 33 செய்யுள்களையுடைய நெய்தற்கலிச் செய்யுள்களை இயற்றினவரும் இவரே. இவர் பாடின பரிபாடல் 8ஆம் செய்யுளின் ‘பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்' என்று கூறியுள்ளார்." நல்லந்துவனாரின் சம காலத்துப் புலவரான மருதன் இளநாகனார் தம்முடைய செய்யுளில் நல்லந்துவனார் பரங்குன்றத்து முருகனைப் பாடினதைக் குறிப்பிடுகிறார்.

12

திருப்பரங்குன்றத்துப் பிராமி கல்வெட்டில் கூறப்படுகிற அந்துவன் இந்த நல்லந்துவனாராக இருக்கக்கூடும். அல்லது அவருடைய முன்னோரான ஓர் அந்துவனாக இருக்கக்கூடும். சங்ககாலத்தில் மக்களிடையே மதக் காழ்ப்பும் மதப் பூசல்களும் இல்லை. சங்க காலத்தில் சமயப் பகைமை மிகமிகச் சொற்பம். சங்க காலத்துக்குப் பிறகுதான் மதப்பூசல்கள் தமிழகத்தில் தாண்டவம் ஆடின. சங்க காலத்தில் எல்லாச் சமயத்தாரும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். நல்லந்துவ னாரே பரங்குன்றத்துக் குகையைத் தானஞ் செய்தவராக இருக்கலாம்.

அடிக்குறிப்புகள்

1. Fig. 47, No. 15, P.113, Plate XLI No.15, Arikamedu, An Indo-Roman Trading Station on the Ease Coast of India by R.E.M. Wheeler, with Contributions by A. Ghosh and Krishna Devar pp. 17-124. Ancient. No. 2. July 1946.

2. P. 112, No.9, Plate XLI, No.9, Ancient India. No. 2, July 1946.

3.

P. 113. No. 9. Ancient India. No. 2.

4. Proceedings and Transactions of the 1st All India Oriental Conference.

5. P. 288, Proceedings and Transactions of the Third All India

Oriental Conference, Madras 1924.

6. The Brahmi Inscriptions of Southern India, N.1.A. Vol. I.