உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

137

திருப்பரங்குன்றத்தில் இன்னோர் இடத்தில் உள்ள குகையில் எழுதப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். மலையின் உச்சியில் உள்ள இந்தக் குகைக்கு ஏறிச் செல்வது மிகக் கடினமானது. இந்தக் குகையில் எழுதப்பட்டுள்ள பிராமி வாசகம் பன்னிரண்டு எழுத்துக்களைக் கொண்டது. இஃது 1951-52ஆம் ஆ ண்டின் 142வது எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக் கிறது. இந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. இதன் வரி வடிவம் இது:

HIROFFSEAS÷

‘அந்துதன் கொடுபிதவன்' என்பது இதன் வாக்கியம். திரு. டி.வி. மகாலிங்கமும், ஐ. மகாதேவனும் இதைச் சரியாகவே படித்துள்ளனர்.

'கொடுபிதவன்' என்பதற்கு விளக்கம் கூறுவோம். ப் என்னும் பகர ஒற்றெழுத்தும், த் என்னும் தகர ஒற்றெழுத்தும் இதில் விடுபட்டுள்ளன. ஒற்றெழுத்துக்களைச் சேர்த்துப் படித்தால் ‘கொடுப் பித்தவன்' என்றாகும். சங்க காலத்துப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக் களில் பல ஒற்றெழுத்துக்கள் விடுபட்டுள்ளதைக் காண்கிறோம். இது கற்றச்சரின் தவறாக இருக்கலாம். அல்லது எழுதியவரின் தவறாகவும் இருக்கலாம். பிராமிக் கல்வெட்டு வாசகங்களை எழுதியவர் பெரும்பாலோர் நன்றாகக் கல்வி கற்றவர் அல்லர் என்பது அவர்கள் எழுதியுள்ள வாக்கியங்களிலிருந்து அறிகிறோம்.

இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்த அந்துவன் என்பவரைப்பற்றிக் கூற வேண்டும். கடைச்சங்க காலத்தில் அந்துவன் என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தனர். அவர்களுடைய பெயரைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். அந்துவன் கீரன், அந்துவன் சாத்தன், வேண்மாள் அந்துவஞ்செள்ளை, நல்லந்துவன் என்னும் பெயர்களைப் பார்க்கிறோம். அந்துவன் கீரன் என்னும் அர- சனைக் கல்லாடனார் புறம் 359இல் பாடியுள்ளார். அந்துவன் சாத்தனை ஒல்லையூர் பூதப்பாண்டியன் தன்னுடைய வஞ்சினக் காஞ்சியில்’