உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிறந்த நாகரிகம் உள்ள நகரங் களாக இருந்தன. இந்த நகரங்கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்து மறைந்துவிட்டன. அண்மைக் காலத்திலே இந்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த டங்களைத் தோண்டிக் கிளறிப் பார்த்தபோது அங்கே பலப்பல பொருள்களைக் கண்டெடுத்தார்கள். அப்படிக் கிடைத்த பொருள் களில், ஒருவகையான சித்திர எழுத்துக்கள் எழுதப்பட்ட முத்திரை களும் ஏராளமாகக் கிடைத்தன. இதனால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவில் சித்திர எழுத்துக்கள் வழங்கிவந்தன என்பது உறுதியாகத் தெரிகிறது.

மொஹஞ்சதாரோவில் காணப்பட்ட சித்திர எழுத்துக்களைப் படித்து அதன்பொருளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்த பூனா பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஹீராஸ் பாதிரியார் அவர்கள், இந்த சித்திர எழுத்துக்கள் திராவிட (தமிழ்) மொழியுடன் தொடர் புடையன என்று கூறுகிறார். சில சித்திர எழுத்துக்கள், குறள் வெண்பாவாக அமைந்திருக்கின்றன என்றும் கூறுகிறார். ஆனால், இவர் கருத்தை புராதன புதைபொருள் ஆராய்ச்சிக்காரர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. மிகப் பழைய காலத்தில் தமிழ்நாட்டிலும் சித்திர எழுத்துக்கள் வழங்கி வந்தன என்றும், அந்த எழுத்துக்களுக்குக் கண் எழுத்து என்றும் ஓவிய எழுத்து என்றும் உரு எழுத்து என்று வேறு பெயர்கள் உண்டு என்றும் தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது.

66

'காணப்பட்ட உருவம் எல்லாம்

மாணக் காட்டும் வகைமை நாடி

வழுவில் ஓவியன் கைவினைபோல எழுதப் படுவது உருவெழுத் தாகும்.”

என்று ஒரு பழைய இலக்கண சூத்திரம் கூறுகிறது.

6

சித்திர எழுத்துக்கள், எழுதுவதற்குச் சிரமமாக இருந்தது. ஓவிய எழுத்து என்றும், கோடு கருத்துக்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிவிக்க முடியாதனவாக இருந்தன. ஆகவேகாலக்கிரமத்தில் புதுப்புது எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பட்டுக் கடைசியாக இப்போது வழங்குகிற ஒலி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒலி எழுத்துக்கள் எழுதுவதற்குச் சிரமம்