உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

-

"உவ்விடம் (உவன்) வசிக்கிற முனிவன் (ஆசீரியன்) கணிய நந்திக்குத் தர்மம் நெடுஞ்செழியன் பண(வ)ன் (பஞ்சவன்) கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்'

குவவன் என்பதை உவன் என்று திரு.ஐ. மகாதேவன் வாசிக்கிறார்.

ஆனால், இந்தச் சாசனத்தின் வாசகத்தைக் கீழ்க்கண்டபடி அமைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது:-

கணியனந்தி ஆசீரிய குவவனுக்கு (கொடுத்த) தருமம். (இதை) ஈத்தவன் நெடுஞ்செழியன். பணயன் (ஆகிய) கடலன் வழுதி கொட்டுபித்த (கொத்துவித்த) பள்ளி.

(கொட்டுவித்த என்பதன் கருத்து பாறையைக் கொத்திச் செப்பம் செய்து கற்படுக்கையை யமைத்த என்று இருக்கலாம்)

இந்தத் தருமத்தை யளித்தவன் அதாவது, முனிவர் வசிப்பதற்குக் குகையைத் தானமாகக் கொடுத்தவன் நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் என்பதும், அந்தக் குகையைச் செப்பஞ்செய்து முனிவர் வசிப்பதற்கு ஏற்றதாகப் பள்ளியாகச் செய்வித்தவன் அப்பாண்டியனுடைய பணயன் ஆகிய (தச்சனாகிய) கடலன் வழுதி என்பதும், இந்தப் பள்ளியைத் தானமாகப் பெற்ற முனிவன் கணியன் நந்தி குவவன் என்பதும் இச்சாசனத்திலிருந்து அறியப்படுகின்றன.

திரு. ஐ. மகாதேவன் அவர்கள், இந்தச் சாசனத்தை யளித்த பாண்டியனின் பெயர் நெடுஞ்செழியன் பஞ்சவன் கடலன் வழுதி என்று படிக்கிறார். இச்சாசனத்தில் வருகிற பணவன் என்னும் சொல் பிராகிருத மொழி என்றும், அது பஞ்சவன் என்று பொருள்படும் என்றும் அது பஞ்சவனாகிய பாண்டியனைக் குறிக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

அவர் கூற்று தவறு என்று தோன்றுகிறது. பணயன் என்பதே சரியான சொல். அது கற்றச்சன், கருமான் என்னும் பொருள் உள்ளது. அரசனுடைய தச்சனுக்குப் பணயன் என்று அக்காலத்தில் பெயர் வழங்கி வந்தது. பிற்காலத்தில், பணயன் என்னுஞ் சொல் பணயகாரன் என்று வழங்கப்பட்டதைச் சாசனங்களில் காணலாம். வேள்விக்குடி செப்பேடு, சின்னமனூர் செப்பேடு, சீவரமங்கலச் செப்பேடு முதலிய