உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

"

பாண்டியரின் செப்பேட்டுச்

191

சாசனங்களை

பிற்காலத்துப் எழுதியமைத்தவரின் பெயர்கள் அச் சாசனங்களில் கூறப்படுகின்றன. அவர்கள் அச்சாசனங்களில் பணயகாரன் என்றே கூறப்படுகின்றனர். எனவே, பணயன் அல்லது பணயகாரன் என்பது அரசரின் கீழ் பணிபுரிந்த தச்சர்களைக் குறிப்பனவாகும் என்பது ஐயமறத் தெரிகின்றது. இந்தச் சாசனத்தில் வருகிற பணயன் என்பதற்குக் கல்தச்சன் என்பதே பொருளாகும். அது பணவன் என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபு என்று கருதுவது தவறு ஆகும்.

அந்தப் பணயனாகிய கற்றச்சனின் பெயர் கடலன் வழுதி என்று சாசனம் கூறுகிறது. கடலன் என்பது தச்சனுடைய சிறப்புப் பெயர். வழுதி என்பது பாண்டி மன்னரின் சிறப்புப் பெயர். அரசரின் கீழ் அலுவல்புரியும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் அரசரின் பெயரையே தாங்களும் சூட்டிக்கொள்வது அக்காலத்து மரபு. இதனைப் பழைய சாசனங்களில் காணலாம். அந்த வழக்கப்படி இந்தக் கல்தச்சனாகிய பணயனும் வழுதி என்னும் பாண்டியன் பெயரைச் பயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறான்.

இந்தச் சாசனத்துக்கு இதுவே சரியான பொருள் என்பது தெரிகின்றது. ஈத்தவன் நெடுஞ்செழியன். கொட்டுபித்தவன் (கொத்துவித்தவன் என்று இருக்க வேண்டும். எழுதுவோர் பிழையால் கொட்டுபித்தவன் என்று எழுதப்பட்டிருக்கிறது) பெயர் பணயன் கடலன் வழுதி. வழுதி என்பது வழுத்தி என்று தவறாக எழுதப்பட்டிருக்கிறது.

கொட்டுபித்த என்பதைக் கொடுப்பித்த என்று திரு.ஐ. மகாதேவன் கருதுகிறார். அப்படியானால் ஈத்தவன், கொடுப் பித்தவன் என்று இரண்டு சொற்கள் மிகையாக உள்ளன காண்க.

சங்க காலத்துப் பிராமி எழுத்துச் தமிழ்ச் சாசனங்களில் தமிழ் அரசரின் பெயர் காணப்படவில்லை என்றும் அக்காலத்தில் அரசர்கள் இருந்திருந்தால் அவர்களுடைய பெயர்கள் சாசனங்களில் கூறப் படாமல் இருக்குமா? என்றும் ஆகவே, சங்ககாலம் என்பது பொய்க் கதை என்றும் சில போலி ஆராய்ச்சிக்காரர் விதண்டாவாதம் செய்து வந்தனர். அவர்களுக்கு இந்தச் சாசனமும் முன் இதழில் வெளியிட்ட சாசனமும் தகுந்த விடையளிக்கின்றன. இனியேனும் அவர்கள் சங்க காலத்தைப் பற்றி ஐயப்படமாட்டார்கள் என்று கருதுகிறோம்.