உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

1.

66

அடிக்குறிப்புகள்

“அருகனென நிறுத்தி இவனைத் தெய்வமாகவுடையான் யாவ னெனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, 'ஒற்றுமிகும்' என்பதனாற் ககர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டு மிகும்' என்பதனால் அகரச் சுட்டை மிகுத்து, 'முன்னொற் றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் சிறந்து' என்பதினால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிக்க” என்பது நேமிநாதம்; எழுத்ததிகாரம்; 10ஆம் செய்யுளுரை.

2. நேமிநாத தீர்த்தங்கரரின் உறவினரான கண்ணபிரான், இனி உலகத்திலே தோன்றப் போகிற சமணதீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப் போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை.