உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

23

என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங் கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கை யாகும்.

இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின்

பெயர் வருமாறு:

1. விருஷப தேவர் (ஆதி பகவன்.) தி

2. அஜிதநாதர். 3. சம்பவ நாதர். 4. அபி நந்தனர். 5. சுமதி நாதர். 6. பதும நாபர். 7. சுபார்சவ நாதர். 8. சந்திரப் பிரபர். 9. புஷ்ப தந்தர் (சுவிதி நாதர்). 10. சீதள நாதர்

(சித்தி பட்டாரகர்) 11. சீறீயாம்ச நாதர். 12. வாச பூஜ்யர்.

13. விமல நாதர்

14. அநந்த நாதர்

(அநந்தஜித் பட்டாரகர்)

15. தருமநாதர். 16. சாந்தி நாதர். 17. குந்து நாதர்

(குந்து பட்டாரகர்)

18. அரநாதர். 19. மல்லிநாதர். 20. முனிசு வர்த்தர்.

21. நமிநாதர் (நமிபட்டாரகர்.) 22. நேமி நாதர்

(அரிஷ்ட நேமி.)

23. பார்சுவ நாதர்.

24. வர்த்தமான மகாவீரர்.

தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வ மாகத் தொழப்படுகின்றனர்.

சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தை போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக் கொள்வ தில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவ நாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற் றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங் கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங் கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன: