உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

4. பிரதிகிர்மணம் :

பாவத்திற்கு காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினால் நேராதபடி காத்துக் கொள்ளுதல்.

5. கழுவாய் :

அஃதாவது பிராயச்சித்தம். சமண முனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்ந்து விட்டால் அதணையுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக் குற்றத்தைக் கழுவுதல்.

66

66

'ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை நின்று நினைத்திரங்கற் பாற்று.

'தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்றடங்கித்

தூயவழி நிற்றலும் அற்று.

6. விசர்க்கம் :

(அருங்கலச் செப்பு.)

காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும் போது வரும் ன்பங்களை அஞ்சாமல் பொறுத்தல். வாளும் உறையும் போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.

"பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை" என்று கருதி உடற் பற்றையும் நீக்கித் துறவின் உயர்நிலையை யடைந்த சமண முனிவர். தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதைக் கூறுவது தான் கீழ் வரும் ஏழு ஒழுக்கங்கள். அவையாவன : 1. லோசம் 2. திகம்பரம் 3. நீராடாமை 4. தரையிற் படுத்தல் 5. பல்தேய்க்காமை 6. நின்று உண்ணல் 7. ஏகபுக்தம் என்பன. இவற்றை விளக்குவாம். 1. லோசம் :

அஃதாவது மயிர் களைதல். சமண முனிவர் துறவு கொள்வதற்கு முன்னர்த் தீக்ஷை பெறுவர். தலைமயிரைக் களைவது தீக்ஷையில் இன்றியமையாதது. தலைமயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களைய வேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச் செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்க வேண்டும். இவ்வாறு மயிர்