உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

41

தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புல நுகர்ச்சியை மனம், மொழி, மெய்களாலும், நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம். ஆகையால் அத்தகையவற்றைச் சமண முனிவர் ஐம்பொறி களாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பங்களை மட்டும் அடக்க வேண்டும்.

"மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினை கைவாய்

-

கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காது வீடு பெறும்.

99

என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

ஆவஸ்யகம் ஆறு :

இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும். அவையாவன:

1. சாமயிகம். 2. துதி. 3. வணக்கம். 4. பிரதிகிர் மணம். 5. கழுவாய். 6. விசார்க்கம் என்பன.

இவற்றின் விளக்கம் வருமாறு:

1. சாமயிகம் :

இன்ப துன்பம், நன்மை தீமை, உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.

2. துதி :

இருஷபர் முதலிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.

3. வணக்கம் :

அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங் களையும், சாத்திரங்களைக் கற்ற தபசிகளையும், தீக்ஷை கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.