உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

45

படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்கு பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அஃதாவது, பகல் நேரத்திலேயே, சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ள வேண்டும்.

இதுகாறும் கூறிய இவையே சமண முனிவர் கைக்கொண்டொழுக வேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

சமண முனிவர் உடற்பற்றினைக் குறைத்துச் சக்திக்குத் தகுந்தபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்குமிஞ்சிச் செய்யாமல் தமது உடல்நிலைக்கு ஏற்றபடி செய்து வந்தனர். சமணரைக் "கடுநோன்பிகள்” என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமணநூலில் கீழ்கண்ட செய்தி கூறப்படுகிறது.

66

"யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தி யார்த்த மாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணாவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்ப நுகர்ச்சி) துறந்தனம்.... யாங்கள் பலகாலுண்ணவும், தின்னவும், குளிக்கவும், தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், “சக்தி தத்ஸ தியாக தபஸி” (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சக்தியை அதிக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெயினிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும், மழையும், காற்றும், முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?

"உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.

(குறள். 241)

என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்த லல்லது வெயில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி ஒழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய,