உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

வந்ததாகத் தெரிகிறது. 22ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாத சுவாமி, கண்ண பிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர் காலத்திலே சமண தீர்த்தங்கரராகப் பிறந்து சமண மதத்தை நிலை நாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன: இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ண பிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன.

கண்ணபிரானிடத்தில அகத்தியர் சென்று அவர் இனத்த வராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார்:

அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடிவேளிரை யும் அருவாளரையும் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார்; (தொல்: எழுத்து. பாயிரம் உரை)

66

'இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப் பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது;

(தொல்: பொருள். அகத்திணை. 32ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை.)

மலயமாதவனாகிய அகத்தியர், நிலங்கடந்த நெடுமுடி யண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக் குடியைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ் நாட்டிற் கொண்டு வந்து குடியேற்றின செய்தி இதனால் அறியப்படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருந்தனர். அவர்களுள் ஓர் அகத்தியர் வேளிரையும் அருவாளரை யும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவது இவர் காலத்தில் கர்ண பரம் பரையாக வழங்கி வந்த வரலாறாக இருக்கவேண்டும்.

6

கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய அகத்தியரால் அழைத்துவரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்க வேண்டும். பதினெண்குடி வேளிர் தமிழ்நாட்டில் குடியேறியபின், சேர சோழ பாண்டிய அரசர் களுக்குப் பெண் கொடுக்கும் உரிமையுடையராக வாழ்ந்து வந்தனர்