உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

75

‘பக்தி' இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு 'இந்து' மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய ‘இந்து' மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச் செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே இருக்கு, யசுர் சாமம், அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளா யிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட - வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந் தேடுதற் கென்க.

அவ்வாறே, ‘முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்,' ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,' 'செந்தமிழோ டாரியனைச் சீரியனை,' ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய், அண்ணா மலையுறையும் அண்ணல் கண்டாய்,' அந்தமிழின் இன்பப் பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங் கோவினை' என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட - ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில் ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ என்றும், ‘தாரணிமேற் சைவமுடன் அரு மறையின் துறைவிளங்க' என்றும், சைவ முதல் வைதீகமும் தழைத்தோங்க என்றும் ‘அருமறைச் சைவந் தழைப்ப என்றும், ‘சைவநெறி வைதிகத்தின் தருமநெறி யொடுந் தழைப்ப என்றும் ஆங்காங்கே திராவிட வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.

புதிதாகத் தோன்றி இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அது மட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டி னின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு அகச் சமயம்' என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில்

6