உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

சுளைநன் மலர்இட்டு

99

நினைமின் நெடியானே.

79

(நாலாயிரம், 5 திருவாய்மொழி, 10)

‘ஓது வேதிய னார்திரு வொற்றியூர் பாத மேத்தப் பறையும்நம் பாவமே.'

‘உரைசெய் நூல்வழி யொண்மலர் இட்டிடத் திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்.'

(தேவாரம் - அப்பர்)

(தேவாரம் - அப்பர்)

'கச்சிளவர வசைத்தீர் உமைக் காண்பவர் அச்சமோ டருவிளை யிலரே’

(தேவாரம் - சம்பந்தர்)

'தாழ்சடை முடியீர் உமைக் காண்பவர்

ஆழ்துயர் அருவினை யிலரே’

(தேவாரம் -சம்பந்தர்)

‘பிண்டம் அறுப்பீர்காள்!

அண்டன் அரூரரைக்

கண்டு மலர் தூவ

விண்டு வினை போமே.'

(தேவாரம் - சம்பந்தர்)

இதுபோன்று மேற்கோள்களை ஏராளமாகக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றோம். இதனால் சைவ வைணவராகிய ‘இந்து'க்களுக்கு பக்தி ஒன்றினாலேயே மோட்சம் பெற இயலும் என்னும் கொள்கை உண்டு என்பது அங்கை நெல்லிக்கனி என அறியப்படும். அன்றியும் இல்லறத் தார்க்குச் சுவர்க்க பதவி தவிர வீடுபேறு கிடையாது; துறவறத்தார்க்கே வீடுபேறு உண்டு என்னும் சமண சமயக் கொள்கையை மறுத்து, இல்லறத்தாருக்கும் வீடுபேறு உண்டு என்னும் இந்துமதக் கொள்கையைத் திருஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

'பிறவியால் வருவன கேடுள ஆதலாற் பெரிய இன்பத் துறவியார்க் கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே! மறவல்நீ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி அறவன் ஆரூர் தொழுதுய்யலாம் மையல்கொண்டஞ்சல் நெஞ்சே.*