உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று என்ன, அவனை அழைத்துக் கேட்க, அவனும் என்னால் வந்ததன்று; ஒரு வேஸ்யை போகவரத் திரிந்தாள்; அவளைப் பார்க்கவே பானை பெருத்தது என்ன, அவளை யழைத்துக் கேட்க, அவளும் என்னால் அன்று; வண்ணான் புடவை தராமையாலே போகவரத் திரிந்தேன் என்ன, அவனை யழைத்துக் கேட்க, அவனும் என்னால் அன்று; துறையில் கல்லிலே ஓரமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, நீயன்றோ இத்தனையும் செய்தாய்; நீ பழிகொடுக்க வேணும் என்ன, அவனும் மௌனியாகையாலே பேசாதிருக்க, உண்மைக்குத்தரமில்லை என்றிருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான் என்று ராஜா அவன் தலையை யரிந்தான்.

இது கட்டுக் கதையே. ஆனாலும், மற்றச் சமயத்தார் சமணர்மேல் பழி சுமத்தினார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகும். சோழருடைய தலைநகரமாகிய உறையூர் மண்மாரி பெய்து அழிந்துபோனபோது, அதனைச் சமணர் தமது மந்திர சக்தியினால் அழித்தார்கள் என்று அவர்கள்மீது பழி சுமத்தியதையும், மற்றும் அபவாதங்களையும், இந்நூலில் மற்றோர் இடத்தில் காண்க.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே செஞ்சி வட்டா ரத்தில் நடைபெற்ற ஒரு செய்தியைக் கூறி இதனை முடிப்போம். கி.பி.1478 இல் செஞ்சிப் பிரதேசத்தை அரசாண்டவன் வெங்கடபதி நாயகன் என்பவன். இவனுக்குத் துமால் கிருஷ்ணபப்ப நாயகன் என்னும் பெயர் உண்டு. இவன் விஜயநகர மன்னருக்கு உட்பட்ட தெலுங்கு இனத்தவன். இவன், உயர்ந்த குலத்தவரான ஒவ்வோர் இனத்திலும் ஒவ்வொரு மனைவியை மணக்கவேண்டும் என்று எண்ணங்கொண்டு, முதலில் உயர்ந்த குலத்தவரான பிராமணர் களை அழைத்து, தனக்கு ஒரு பிராமணப் பெண்ணை மனைவி யாகத் தரவேண்டும் என்று கேட்டான். தங்களை விடத் தாழ்ந்த இனத்தவனாகிய இவனுக்குப் பெண் கொடுக்க பிராமணர் இசைய வில்லை. மறுத்துக்கூறவும் முடியவில்லை. ஏனென்றால் இவன் நியாய அநியாயம் அறியாத மூர்க்கன். ஆகவே, பிராமணர்கள் இந்தத் தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சமணர்களைச் சங்கடத்திற்குள்ளாக்கி விடவும் யோசனை செய்து, அரசனிடம் சென்று, “சமணர்கள் பிராமணர்களை விட உயர்ந்த இனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆகவே, முதலில் அவர்கள் பெண் கொடுத்தால் பிறகு எங்கள் இனத்தில் பெண் கொடுக்கிறோம்,” என்று