உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

குடனும் ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர்; இந்தக் குளம் மிகச் சிறியதாக இருந்தது. அந்தச் சிறு குளத்தின் நான்கு கரைகளிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பெரிய குளமாகத் தோண்டவேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவ நாயனார் முயற்சி செய்தார். இந்தச் செய்தியை பெரியபுராணம் கூறுகிறது.

“செங்கண் விடையார் திருக்கோயில்

குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு

எங்கும் அமணர் பாழிகளாய்

இடத்தால் குறைபா டெய்துதலால்

அங்கந் நிலைமை தனைத்தண்டி யடிகள் அறிந்தே ஆதரவால்

இங்கு நானிக் குளம் பெருகக்

கல்ல வேண்டும் என்றெழுந்தார்.

குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடைய நிலங்களும், கட்டிடங்களும் உள்ளன. குளத்தைப் பெரியதாகத் தோண்ட வேண்டு மானால், குளக்கரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும், டிடங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும். தண்டியடிகள் சமணருடைய நிலங்களையும், கட்டிடங்களையும் விலை கொடுத்து வாங்கியபிறகு குளத்தைப் பெரியதாகத் தோண்டவில்லை. குளத்தைப் பெரியதாகத் தோண்டு கிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும், கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள், வழக்கம்போலக் கலகம் ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி, "தண்டியடிகளால் அமணர் கலக்கம் விளைந்தது.” கலக்கம் மட்டும் நிகழ வில்லை; கலகமும் நடந்தது. ஏனென்றால் சிவபெருமான் அரசன் கனவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார். அரசன், சமணரை ஊரைவிட்டுத் துரத்திய பின்னர், அவர்களுடைய கட்டிடங்களையும், நிலங்க ளையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தோண்டினான். இதனைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது.

“அன்ன வண்ணம் ஆரூரில்

அமணர் கலக்கம் கண்டவர்தாம்

சொன்ன வண்ண மேஅவரை

ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்