உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

89

சிலவற்றைப் புதிய இந்து சமயத்துடன் சேர்த்துவிட்டார்கள். இவ்வாறு, இந்து மதத்தில் புதிய புதிய கொள்கைகள் கலக்கப்பெற்று இந்து மதம் பலவாறு மாறுதல் அடைந்து கொண்டிருந்தது. சமணர் சைவ வைணவராகி இந்துமதத்தில் புகுத்திய சமண சமயக் கொள்கை களை 'இந்து மதத்தில் சமண சமயக் கொள்கைகள்' என்னும் அதிகாரத்தில் காண்க.

இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங்களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 'மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியே யுள்ள அமணசாமி யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும்பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.

அடிக்குறிப்புகள்

1. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள் புராணம்.

-

2. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள், 27.

3. இச்செய்தியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள 'பௌத்தமும் தமிழும்' என்னும் நூலிற் காண்க.