உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில், வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையார் என்பவர் ஒருவர். இவர் திண்டிவனத்துக் கடுத்த தாயனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் உடையார் பாளையம் குறுநில மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். குறுநில மன்னர் இவருக்கு நிலபுலன்கள் அளித்து ஆதரித்தார். உடையார் பாளையத்தில் தங்கி யிருந்த காங்கேய உடையார், சிலகாலங் கழித்து மைசூரில் உள்ள சிரவண பெளகொள மடத்துக்குச் சென்று அங்கிருந்த வீரசேனாசாரியாரை அழைத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்து அங்கு மதம் மாறியிருந்த பழைய சமணர்களை மீண்டும் சமண மதத்தில் சேர்ப்பித்தார். வீரசேனா சாரியார், சமண முறைப்படி அவர்களுக்குப் பூணூல் அணிவித்துத் தீக்கை கொடுத்துச் சமணர் ஆக்கினார்.

காங்கேய உடையார் பரம்பரையினர் இன்றும் தாயனூரில் இருக்கின்றனர். செஞ்சிப் பகுதியில் மறைந்து போன சமண மதத்தை மீண்டும் புதுப்பித்தவரின் பரம்பரையின ராகையால், இவர்களுக்கு இங்குள்ள சமணர், திருமணம் முதலிய காலங்களில் முதல் மரியாதை செயது வருகின்றனர்.

ம்

இவ்வாறெல்லாம் சமணர் பற்பல காலத்தில் பற்பல துன்பங்களை அடைந்தார்கள். ஆனால், பௌத்த மதம் தமிழ் நாட்டில் அடியோடு அழிந்துவிட்டதுபோலச் மதம் முழுவதும் மறைந்து விடவில்லை. சமணர் தமிழ்நாட்டில் இன்றும் சிறு தொகையினராக இருந்து வருகிறார்கள்.

சமண

சமயப்போர் கடுமையாக நடந்த காலத்திலும், சமண சமயம் குன்றிய காலத்திலும், சமணரிற் பெரும்பாலோர் “இந்து” மதத்தில் சேர்ந்து சைவராகவும், வைணவராகவும், மதம் மாறிவிட்டனர். இவ்வாறு இந்து மதத்தில் புகுந்த சமணர் வாளா வெறுங்கையோடு வந்துவிட வில்லை. சைவ வைணவராக மாறி சமணர் தம் சமண சமய ஒழுக்கங் களையும் கொள்கைகளையும் இந்து மதத்தில் புகுத்திவிட்டார். ஏற்கனவே, திராவிட வைதீக மதங்களின் கொள்கைகள் கலக்கப்பெற்றுப் புதிய உருவடைந்த இந்து மதத்தில் இன்னும் புதியதாகச் சமணக்கொள் கைகளும் கலக்கத் தொடங்கின. இதனோடு நின்றபாடில்லை. இக் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்த பெளத்த மதத்தினரும் இந்து மதத்தோடு சேரத் தொடங்கி அவர்களும் தம் சமயக் கொள்கைகளிற்