உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

95

கயிலை மலைக்குச் சென்றார்கள் என்றும், காரைக்கால் அம்மையார் இம் மலைக்குச் சென்று இவ்விடத்தைக் காலினால் மிதிக்க அஞ்சித் தலையினால் நடந்து சென்றார் என்றும் சைவ புராணங்கள் கூறுகின்றன. சைவசமயப் பெரியார்கள் எல்லாரும் திருக்கயிலாய மலையையும் அதில் எழுந்தருளியிருக்கும் கயிலாயநாதனையும் தம் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். திருக்கயிலாய மலை சைவர்களுக்குப் புனிதமான திருமலையாகும்.

சமணர்களுக்கும்

அதுபோன்றே, திருக்கயிலாயமலை புனிதமான திருப்பதியாகும். ஏன்? சமணருடைய முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் இக்கயிலை மலையிலே வீடு பேறடைந்தார். ஆகவே, இது சமணர்களுக்குப் புண்ணியத் திருப்பதியாகும். திருக்கலம்பகம் என்னும் சமண சமய நூல், ஆதிநாதரை, கயிலாயம் என்னும் திருமலைமேல் உறைகின்றவர் என்று கூறுகிறது. மேலும்,

“போக்கறு சுடர் வெள்ளி

மாக்கயிலை மிசை நாப்பண்

ஆதிநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்றும் மேற்படி நூல் கூறுகின்றது. இதனால் சைவர்களுக்குரியது போலவே சமணர் களுக்கும் உரிய புனிதமான திருப்பதி கயிலாயமலை என்பது விளங்குகிறது.

சடைமுடி :

சைவர்கள் வணங்கும் சிவபெருமான் சடைமுடியுடையார் என்றும், அதனால் அவர் சடையன் என்று கூறப்படுகிறார் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் ஆதிநாதரும் (ரிஷபதீர்த்தங்கரர்) சடை முடியுடையவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. ஆதிநாதரைத் தவிர ஏனைய இருபத்து மூன்று தீர்த் சடைமுடியுடன் ஆதிநாதர் தங்கரர் எல்லோரும் சடைமுடியற்றவர்கள். இவர்கள் திருவுருவங்கள் சடை முடியில்லாமல் அமைக்கப்பட்டிருப் பதை இன்றும் சமணக் கோயில் களில் காணலாம். ஆனால், ஆதி நாதர் மட்டும் சிவபெருமானைப் போலவே சடைமுடியுடையவர். இதனைத் திருக்கலம்பகம்,

66

'ஆலநெடு நிழலமர்ந்தனை

காலம் மூன்றும் கடந்தனை

தாழ்சடை முடிச் சென்னிக்

காசறு பொன்னெயிற் கடவுளை