உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

99

சிவபெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். தேவாரத்திலும் இச்செய்தி பல ங்களிற் கூறப்பட்டுள்ளது.

'சாடினார் காலன் மாளச் சாய்க்காடுமேவினாரே'

என்றும்

‘காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே'

என்றும்

"சாற்றிநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பார்போலும் குறுக்கைவீ ரட்டனாரே’

என்றும் தேவராம் கூறுகிறது. இன்னும் பல மேற்கோள்கள் காட்டக் கூடுமாயினும் விரிவஞ்சி விடுகின்றோம் இனி, சமண நூல்களிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுவோம்;

"கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே

கூறுகிற்பது மெய்ப்பொருட் கூற்றையே

وو

என்றும், “காலனை வெந் கண்ட வென்றிப் பெருமானே” என்றும் சமணரின் திருக்கலம்பகம் கூறுகிறது.

66

'கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்! தொன்றுமூத்தலைத் துறந்தாய்! தோற்றமாக்கடலிறந்தாய்'

என்று மற்றொரு சமண சமய நூலாகிய நீலகேசி கூறுகிறது. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்றோம்.

சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காகக் (மார்கண்டற்காக) கூற்றுவனை உதைத்தருளி, அடியவர்க்குச் சாவா வரத்தைத் தந்தருளி னார் என்பது சைவரின் புராணக்கதை அருகக் கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடந்து) பிறவா நிலையைத் தாம் அடைந்தார் என்பது சமணரின் சாத்திரக்கொள்கை. காமனைக் காய்ந்தது என்னுங் கதையில், பொதுநோக்காகப் பார்க்கும்போது, இருசமயக் கருத்தும் ஒற்றுமை யுடையதுபோற் காணப்படினும், அடிப்படையான கருத்தில் வேற்றுமை யுடையனவே. அஃதாவது, சிவபெருமான், இயற்கையாகவே பிறப் பிறப்பில்லாதவர்; ஆகையால், தம் அடியவர் பொருட்டுக் காலனை உதைத்து அடியவர்களை இறவாமை உள்ளவர்களாகச் செய்கிறார்.