உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

ஆனால், அருகக்கடவுள், தமது பிறப்பை நீக்கிக்கொள்ளக் காலனைக் கடந்தார் என்பது.

காமனைக் காய்ந்தது :

அருகப்பெருமானும் சிவபெருமானும் காமனைக் காய்ந்தவர் (வென்றவர்) என்று சமணராலும் சைவராலும் கூறப்படுகின்றனர். இவற்றையும் ஆராய்வோம் :

"செற்றங் கனங்கனைத் தீவிழித்தான் தில்லை யம்பலவன் நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே’

என்றும்,

66

"மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்

என்றும்

66

தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்

காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்’

என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளதைப் படிக்கிறோம். சைவர்கள் இதைப்பற்றி நன்கறிந்திருப்பதால் மேன்மேலும் மேற்கோள் காட்டவேண்டியதில்லை. அருகப்பெருமான் காமனைக் காயந்த செய்தியை ஆருகதமத நூல்களிற் காண்போம்.

66

'காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு

நாம மல்லது நவிலாது என்நா.

என்று கவுந்தியடிகள் அருகக்கடவுளைத் துதிக்கிறார் சிலப்பதிகாரத்தில்.

66

அல்லற் பிறவி அகன்றோய் நீ! ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ வெல்லற்கரிய அனங்களை மெய், வெண்ணீறாக வெகுண்டோய் நீ!”

என்பது நீலகேசி.

“களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப

என்பது சீவகசிந்தாமணி

66

66

"சிலைவயங்கு தோளனங்கன் திறலழித்த விசயமென்னோ?” 'கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக் கனன்றாய் தூய விண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங் கறமுரைத் தாய்

99