உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

சமணரின் அருகக்கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண சமய நூல்களும் கூறுகின்றன. அருகப் பெருமான் எரித்த முப்புரம் என்பது காம, வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள். சமண சமய நூல்களில் இருந்து இதனை விளக்குவாம்.

"ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்

திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா”

என்று, கவுந்தி அடிகள் அருகப் பெருமானைப் போற்று கிறார் (சிலப்பதி காரம் நாடு காண் காதை). இதற்கு அடியார்க்கு நல்லார் உரை வருமாறு: “எனது செவிகள் காம, வெகுளி, மயக்கங்களைக் கெடுத்தவனால் ஓதப் பட்ட ஞான பாதமாகிய திருமொழியைக் கேட்டதற்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறப்பனவல்ல.

66

முரணவிய வென்றுலகம் மூன்றினையும், மூன்றில் தரணிமேல் தந்தளித்த தத்துவன்தான் யாரே’

(சிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 81)

இதற்கு நச்சினார்க்கினியர் உரை:

"மூன்றுமதிலையும் அழித்து அங்கம், பூர்வம், ஆதி என்கிற மூன்றாகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் தரணிமேலே தந்து வெளிப்படக் கூறின தத்துவன் யார்தான்?”

66

அரணங்கொடிய மதின்மூன்றும் அழியக்கனன்றீர் அன்றுள்ள முரணம் பொன்றே நுமக்கங்கு

என்பது திருக்கலம்பகம்.

"காவலாகிய

...

கொடுமையையுடைய

ஆவரணங்களான

முக்குற்றமும் கெடக் கோபித்தீர்; கோபிக்கும் காலத்தில், மனத்தினது வலியாகிய ஒரு கணையே உமக்கிருந்தது;” (பழைய உரை)

குறிப்பு : சைவரின் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார் என்பதும், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள் என்பதும், அவ்வாறே சமணரின் அருகப் பெருமானும் முப்புரத்தை எரித்தார் என்பதும் அம்முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் என்பதும் வெளிப் பார்வைக்கு ஒரே கருத்துள்ளவனாகத் தோன்றினாலும், உண்மையில் கருத்து வேறுபாடுடையன. இவ்வேறுபாடுகள் இவ்விரண்டு சமயங்களின்