உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

101

என்பது திருக்கலம்பகம். இவ்வாறு சமண சமய நூல்களும் தம் அருகக்கடவுள் காமனைக் காய்ந்தார் என்று கூறுகின்றன.

பொது நோக்காகப் பார்க்கும்போது,சிவபெருமானும் அருகப் பெருமானும், காமனைக் காய்ந்த செய்தி ஒற்றுமை உடையதாகக் காணப்பட்டாலும், அடிப்படையான கருத்தில் வேறுபாடு உண்டு. அஃதாவது சிவபெருமான், மற்றவர் பொருட்டுக் காமனைக் காய்ந்தார். அருகப்பெருமானோ, தம்மிடத்தில் இருந்த காமம் என்னுங் குற்றத்தை நீக்குவதற்காகக் காமனைக் காய்ந்தார்.

முப்புரம் எரித்தது:

சிவபெருமான் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சமண சமய நூல்கள் கூறுகின்றன.

தேவாரத்திலே, சிவபெருமான் முப்புரத்தை அழித்த செய்தி கூறப்படுகிறது. அவற்றில் சில வருமாறு :

“சிலையினால் மதில்கள் மூன்றும் தீயெழச் செற்ற செல்வர்’

66

'வறவைத் தொழில்புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத் தேர்ப் பறவைப் புரமெரித்தார் எம்மை யாளும் பசுபதியே

99

“செம்பு கொப்புளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி

அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீ ரட்டனாரே

99

முப்புரம் என்பது மூன்று கோட்டைகள் என்று புராணக்கதை கூறுகிறது. ஆனால், முப்புரம் என்பது மும்மலம் என்று தத்துவார்த்தம் கூறப்படுகிறது.

“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்

முப்புர மாவன மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார்அறி வாரே’

என்பது திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம். இதனால் முப்புரம் அல்லது திரிபுரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் என்று தெரிகிறது. ஆகவே சிவபெருமான் முப்புரம் அழித்தார் என்பதற்கு ஆன்மாக்களிடம் பொருந்தியுள்ள மும்மலங்களை அழித்தார் என்று தத்துவப் பொருள் கொள்ள வேண்டும்.