உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

திருக்கோயிலூர் திருவீரட்டானமுடைய தேவருக்குரிய நிலம் தானம் செய்யப்பட்ட சாசனத்தில், 'பள்ளிச் சந்தமாகிய இயக்கிப் பட்டி’ குறிக்கப்படுகிறது." (இதில், இயக்கிப்பட்டி என்பது இயக்கியாகிய யக்ஷிக்குத் தானம் செய்யப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இயக்கி, யக்ஷி என்பது சமண தீர்த்தங்கரரின் பரிவார தெய்வங்களில் ஒன்று.

திருக்கோவலூர் அகஸ்தீஸ்வரர் கோவில் நிலத்தைக் குறிக்கும் சாசனம் ஒன்று. 'குளவி குழி பள்ளிச் சந்தம்' என்னும் நிலத்தைக் குறிக்கிறது.

78

80

சிதம்பரத்துச் சாசனங்கள், ‘திருவம்பலப் பெரும்பள்ளி நல்லூர்’ என்னும் ஊரையும்,9 ‘ஆற்றூரான ராஜராஜ நல்லூரில்' இருந்த ‘பள்ளிச் சந்த’ நிலங்களையும், குறிப்பிடுகின்றன. திருவண்ணாமலைச் சாசனம், ‘மதுராந்தக வளநாட்டு ஆடையூர் நாட்டு ஆடையூர்’ வடக்கில் ஏரி கீழ்பார்க்கெல்லை பள்ளிச் சந்தம் மேல் பார்க் கெல்லை பள்ளிச் சந்தம் நிலங்களைக் குறிக்கின்றது.81 இன்னொரு சாசனம், 'தச்சூர் பள்ளிச் சந்த’த்தைக் குறிக்கிறது.82 இவற்றிலிருந்து இங்கெல்லாம் சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இருந்தன என்பது புலனாகும்.

கொலியனூர் :

(கோய்லனூர் என வழங்கும்) விழுப்புரம் தாலுகாவில் விழுப்புரத்திற்கு தென்கிழக்கு 4 மைலில் உள்ளது. கிலமாய்ப்போன சமணக் கோயில் இங்கு உண்டு. இங்கச் சாசனங்களும் காணப்படுகின்றன.83 கோலியபுரநல்லூர் என்பது இதன் பழைய பெயர்.84 'ஸ்வஸ்தி ஸ்ரீ நயினார் தேவர் பெருமானார் ஸ்ரீ கோயில் திருவிருப்புக் கல்பணி இடை யாறன் திருமறுமார்பன் வணிகபுரந்தரன் திருப்பணி' என்று ஒரு சாசனம் காணப்படுகின்றது.85 காளியுக்தி வருடம் ஆனி மாதம் 10ஆம் நாள் ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர ஆருவ X X X X அசுர நாராயண தியாக சமுத்திர இம்மடி தொராத வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான நல்ல தம்பி முதலியார் பெரிய தம்பியார் கொலியாபுர நல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் பூசை திருப்பணிக்கு பூருவமாக வடக்கு வாசலில் மேற்கு உள்ள விசயராச புரத்து எல்லைக்கு இப்பால் உள்ள நஞ்சை புஞ்சை நாற்பாற் கெல்லையும் தடவிட்டுச் சந்திரா தித்தவரையும் நடத்த சீமை பல பட்டடையும் கல்வெட்டிக் குடுத்த தன்மத்துக்கு அகுதம் நினைத்தவன் கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திலும்