உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

139

யொட்டி, முக்குடையுடன் வீற்றிருக்கும் அருகக்கடவுளின் திரு வுருவமும் தென்புறச் சுவரையொட்டிப் பார்சவநாதர் திருவுருவமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரை யிலும், தூண்களிலும், சுவர்களிலும், ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. இவ்வோவியங்கள் இப்போது சிதைந்து காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலும் இவ்வோவியங்கள் மனதைக் கவரக்கூடியனவாக உள்ளன. இந்த மண்டபத்துக்கு நடுவில் பாறையைக் குடைந்தமைக்கப் பெற்ற ஒரு சிறு கோவில் உண்டு. இதன் அகலமும் நீளமும் உயரமும் 10.1/2 அடி இக்கோயிலின் வாயில் 5 அடி 7 அங்குலம் உயரமும் 2.1/2 அடி அகலமும் உள்ளது. இக்கோயிலில் அருகக்கடவுளின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இக் குகைக் கோயிலை அமைத்தவன் பேர்போன மகேந்திரவர்மன் I என்னும் பல்லவ அரசனாகும். இவன் கி.பி. 600 முதல் 630 வரையில் தொண்டை மண்டலம் சோழமண்டலங்களை அரசாண்டான். இவனுடைய உருவம் இக்குகைக் கோயிலில் ஓவியமாக அமைக்கப் பட்டுள்ளது. இக்குகைக் கோயிலுக்கு வடகீழ்ப்புரத்தில் இயற்கையா யமைந்த ஒரு குகை உளது. இக்குகைக்குள் 17 கற்படுக்கைகள் பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகைக்கு ஏழடிப் பட்டம் என்னும் வழியாகச் செல்லவேண்டும்.121 இக்குகையில் முற்காலத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்து தவஞ் செய்து வந்தனர். இங்கு, பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் சாசனங்கள் உள்ளன. இங்குள்ள சாசனம், 'தொழக்குன்றத்துக் கடவுளன் நீலன், திருப்பூரணன், திட்டைச்சரணன், திருச்சாத்தன், ஸ்ரீபூரணசந்திரன், நியத்தக்கரன் பட்டக்காழி.... த்தூர்க் கடவுளன், என்னும் பெயர்களைக் கூறுகின்றது.12 இப்பெயர்கள் இங்குத் தவஞ் செய்திருந்த சமண முனிவர்களில் சிலருடைய பெயர்கள் எனத் தோன்றுகின்றன.

122

இன்னொரு சாசனம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவனிசேகரன் ஸ்ரீவள்ளுவன் (ஸ்ரீவல்லபன்) காலத்தில் மதுரை யாசிரியன் இளங்கௌதமன் என்பவர் இங்குள்ள உள்மண்டபத்தைப் பழுது தீர்த்து வெளிமண்டபம் ஒன்றைக் கட்டினார் என்று கூறுகிறது.123 மதுரை ஆசிரியன் என்னும் பெயருடைமையால் இவர் சிறந்த புலவராக இருக்க வேண்டும்.

இங்குள்ள ஒரு தோட்டத்தில் உடைபட்ட ஒரு சமண தீர்த்தங்கரர் திருவுருவம் உண்டென்றும் இதனைத் தட்டினால், இசையுடன் கூடிய ஓசை உண்டாகிறது என்றும் கூறுகின்றனர்.