உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

147

பள்ளி மடம்:

அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இக் கிராமம் பண்டைக் காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக் கிராமத்தின் பண்டைப் பெயர், 'திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியல் பள்ளி மடை' என்பது. இங்குள்ள கலாநாதசுவாமி கோயில் சாசனம் ஒன்றில், வேம்பு நாட்டுக் குரந்தி திருக்காட்டம்பள்ளி தேவர் என்னும் சமணக் கோயிலில் நந்தா விளக்குக்காக சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது.153 அனுமந்தகுடி:

2

உள்ளது.

ராமநாதபுரத்துக்கு வடக்கே 37'/ மைலில் திருவாடனைத் தாலுகாவில் உள்ள இக் கிராமத்தில் மழவநாத சுவாமி கோயில் என்னும் சமணக் கோயில் உண்டு. இக் கோயிலின் எதிரில் உள்ள உடைந்து போன சாசனம் சகம் 1455 (கி.பி. 1535) இல் விஜயநகர அரசன் (பெயர் காணப்பட வில்லை.) காலத்தில் எழுதப்பட்டது. இதில், முத்தூற்றுக் கூற்றத்து அஞ்சுக்கோட்டை' என்னும் ஊரும் ஷெ முத்தூற்றுக் கூற்றத்து 'குருவடிமிடி... என்னும் ஜினேந்திரமங்கலம்’ என்னும் ஊரும் குறிக்கப்பட்டுள்ளன. ஜினேந்திரமங்கலம் என்னும் பெயர் இங்கு சமணர் இருந்தனர் என்பதை விளக்குகின்றது. இப்போதும் சமணக்கோயில் உளது. இயக்கி கோமடேசுவரர் முதலிய நான்கு செம்புவிக்கிரகங்களும் உள்ளனவாம்.

திருக்களாக்குடி:

155

154

திருப்பத்தூர்த் தாலுகாவில் உள்ள இவ்வூர், திருப்பத்தூருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உள்ளது. இங்கு மலையும் கோயிலும் உண்டு. இக் கோயில் பண்டைக் காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ளது. இக் கோயிலில், பார்சுவநாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பது போன்று அமைக்கப் பட்டுள்ளது. இத்திருமேனியின் தலைக்கு மேல் ஐந்தலை நாகமும் காணப்படுகிறது.156

இந்த மாவட்டத்தில் இரணியூர்; இளையாத்தங்குடி, நாச்சியா புரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிக்கோட்டை என்னும் ஊர்களில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.

157