உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத்தமிழ் நூல்கள்

கால ஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தொல்காப்பியம், சிலப்பதி காரம், திருக்குறள், தேவாரம், சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நூல்கள் குறித்துச் செய்த ஆய்வுகள் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பண்டைத் தமிழ் நூல்கள் அச்சிட்டு வெளிவந்த சூழலில் அவற்றின் காலம் குறித்த உரையாடல்கள் பெரிதும் முன்னெடுக்கப் பட்டன. வடமொழி சார்புடைய ஆய்வாளர்கள், திராவிடக் கருத்தியல் சார்பான ஆய்வாளர்கள் என இருபிரிவினராக அடையாளம் காணப்பட்டனர். இச்சார்பு அடிப்படையில் தமிழ்நூல்களின் தொன்மை குறித்த உரையாடல்கள் நிகழ்ந்தன. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் திராவிடக் கருத்தியல் சார்பாளராகச் செயல்பட்டவர். எனவே பண்டைத்தமிழ் நூல்களின் காலத்தை மிகவும் பின்னுக்குக் கொண்டுவருவதை மறுத்து கட்டுரைகள் எழுதினார். அவ்வகையான கட்டுரைகள் ‘சங்க காலத் தமிழக வரலாற்றில் சிலசெய்திகள்' (1970) எனும் நூலில் இடம் பெற்றுள்ளன.

8ஆம்

பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை செய்துள்ள கால ஆய்வு களை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மறுத்து எழுதியுள்ளார். குறிப்பாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவை தொடர்பான கால ஆய்வுகள் இத்தொகுதியில் பேசப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை பங்களர் என்னும் சொல் வங்களர் என்னும் சொல்லின் திரிபாகக் கருதி வங்காள நாட்டவரைக் குறிப்பதாக எழுதியுள்ளார். எனவே சிலப்பதிகாரம் கி.பி. நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக அமையவேண்டும் என்பது அவருடைய வாதம். ஆனால் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பங்காளர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதாகவும் அது ஒரு குடியினரைக் குறிப்பதாகவும் எடுத்துக்காட்டி வையாபுரிப்பிள்ளையின் கருத்தை மறுக்கிறார். இவ்வகையில் சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் மயிலை சீனி அவர்கள் பெரிதும் ஈடுபாட்டுடன் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சிலப்பதிகாரம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளில் கண்ணகி தொடர்பான ஆய்வை விரிவாகச் செய்துள்ளார். மேலும் மணிமேகலைக்கும் சிலப்பதிகாரத் துக்கும் உள்ள உறவுகள் தொடர்பாகவும் இவரது ஆய்வுகள் அமைந் துள்ளன. திருக்குறள் தமிழரின் மிகமுக்கியமான நூல் என்பதோடு அந்நூல் சமண, பௌத்த மதங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதை விரிவாக ஆய்வு செய்துள்ளார்.