உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்

சினகஞ்சி பருத்திக்குன்றங் கரந்தை பூண்டி

சிங்கைவைகை திருப்புறம்பை அருகை தாசை சினகிரிவண் தீபைசித்தை வீரை கூடல்

செஞ்சிமுத லூர்பேரை விழுக்கம் வேலை

கனகபுரி இளங்காடு துரக்கோல் வளத்தி

கன்னிலம்தச் சூர்குழசை வாழ்நாற் பாடி விளிவிருதூர் வெண்குன்ற மோடாலை யாமூர்

விடையெய்யில் குறக்கோட்டை விளங்குங் காப்பே.

என்னும் செய்யுள் ஸ்ரீ ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்க் காப்புப் பருவத்தில் காணப்படுகின்றது. இதில் இக்காலத்துள்ள சமணர் ஊர்கள் கூறப்பட்டுள்ளதெனத் தோன்றுகிறது. திரு. சாஸ்திரம் அய்யர் என்னும் சமணப் பெரியார் ஒருவர் ‘ஜைனசமய சித்தாந்தம்’ என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். இக் கட்டுரை இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் (1841 வருடம்) அச்சிடப்பட்ட வேத அகராதி என்னும் நூலில் சேர்க்கப்பட்டி ருக்கிறது. அந்தக் கட்டுரையில் சமணர் ஊர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.

"இவர்களுடைய (சைனருடைய) ஸ்தலங்கள் தெற்கே திருநறுங்கொண்டை என்றும், தீபங்குடி என்றும், சிற்றாமூர் என்றும், பெருமண்டூர் என்றும், இராசமகேந்திரமென்றும், மேற்கே காஞ்சீபுரம் என்றும், திருப்பருத்திக் குன்றமென்றும், பெரிகுளம் என்றும் மூடுபத்திரை என்றும், ஸ்ரீரங்கப்பட்டணமென்றும், கனககிரி என்றும் இருக்கின்றன. பெரிகுளத்தில் ஆசாரிய மடமுண்டு.

இதனால், இவ்வூர்கள் சைனக் கிராமங்களென்பது விளங்கும்.

66

“சமண ஊர்களின் ஜாபிதா” என்னும் கையெழுத்து ஏட்டுச் சுவடி ஒன்று உண்டு. இந்த நூலின் இறுதியில், இந்த ஜாபிதா சகாத்தம் 1738– இல் எழுதிக்கொடுத்த செய்பீத்து என்று காணப்படுவதால், இது கி.பி. 1819-இல் எழுதப்பட்டதாகும். அஃதாவது 138 ஆண்டுகளுக்கு முன்னர் இஃது எழுதப்பட்டது. இந்நூலில், இக்காலத்துள்ள சமணர் ஊர்களின்