உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பெயரும் கோயில்கள் இத்தனை என்பதும் கூறப்பட்டுள்ளது. அவற்றைக் கீழே காண்க. இருபிறைக் குறிக்குள் ந.கோ. என்பது நன்னிலையில் உள்ள சமணக் கோயிலையும், இ.கோ. என்பது இடிந்து பாழ்பட்டுள்ள சமணக் கோயிலையும் குறிக்கும். எண்கள் எத்தனை கோயில்கள் என்பதைக் காட்டும்.

துண்டீரதேசம் (தொண்டைமண்டலம்)

செஞ்சி சேத்துப்பட்டு துக்கிடியில் உள்ள சைனக் கிராமங்கள்.

சித்தாமூர் (ந. கோ. 3), தாயனூர், ஒதலபாடி, கொழப்புலியூர் (கொழப்பலூர்) (ந.கோ.1), கோனாமங்கலம், பெருங்குண நல்லூர், தூளி, தச்சாம் பாடி. எய்யல், கிண்டிப்பட்டு. மலையனூர், தொறப்பாடி (ந.கோ.1), கொசப் பட்டு, கொமியாங்குப்பம், சீயப்பூண்டி, செவளாம்பாடி, நன்னலம் (ந.கோ.1), வளத்தி, அண்ணமங்கலம், கள்ளப்புலியூர் (ந.கோ.1), மஞ்சப் பட்டு (ந.கோ.1), கொளத்தூர் (ந.கோ.1), கென்னாத்தூர் (ந.கோ.1), திருவா பாடி, சிற்றருகாவூர் (ந.கோ.1), புளிமாந்தாங்கல், தொண்டூர் (ந.கோ.1), பொன்னகர், உமையாந்தாங்கல், நெற்குன்று, அருகன்பூண்டி, வீரணாம நல்லூர், எளமங்கலம் (இ.கோ.1), அகரம், குறவன் புத்தூர், (பெரும்புகை) பெருமுகை (ந.கோ.1), சிறுகடம்பூர் (இ.கோ.1), சக்கிராயபுரம், வடதரம், வயலாமூர் (ந,கோ.1) மோழியனூர், பேரணி, செண்டியம்பாக்கம்.

திருவோத்தூர் துக்கிடியில்,

கரந்தை (ந.கோ.3), திருப்பறம்பூர் (ந.கோ.1), கள்ளை, பெருங் கட்டூர், நாகல், நறுமாப்பள்ளம், வேளியநல்லூர், பனபாக்கம், நெல்லி, சுரையூர், மேலப்பயந்தை, வாழைப்பந்தல் (இ.கோ.1), கோயிலாம்பூண்டி (இ.கோ.1), தின்னலூர்.

வந்தவாசி துக்கிடியில்,

கடனம்பாடி (இ.கோ.1), இராமசமுத்திரம், நெல்லியாங் குளம், எறமலூர், நல்லூர், வில்லிவனம், கூடலூர் (இ.கோ.1), தெள்ளாறு (இ.கோ.1), கூத்தவேடு(?) அகரகுறக்கொட்டை, விருதூர், பெரியகொறக் கொட்டை, சென்னாந்தல், செங்கம் பூண்டி, புத்தூர், பொன்னூர் (ந.கோ.1), இளங்காடு (ந,கோ.1), சிந்தகம்பூண்டி, சாத்தமங்கலம் (ந.கோ.1), வங்காரம் (இ.கோ.1), அலகரம் பூண்டி, வெண்குணம், சேந்தமங்கலம் (ந.கோ.1) எறும்பூர், நல்லூர், ஆயில்பாடி, பழஞ்சூர்,