உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

"மாதவந் தாங்கி வையத்து ஐயராய் வந்து தோன்றி ஏதமொன் றின்றி வீடும் எய்துவர் தைய லார்கள்.

99

இதே கருத்தைச் சீவகசிந்தாமணியும் கூறுகிறது. சீவகன் துறவு பூண்டபோது அவனுடன் துறவு பூண்ட அவனுடைய தேவிமார், வீடுபேறடைவதற்காகத் தவம் செய்யவில்லை. பெண் பிறப்பு நீங்கும்படியாகத் தவம் இருந்தனர். அந்தத் தவத்தின் பயனாக அவர்கள் மறு பிறப்பிலே தேவலோகத்திலே இந்திரர்களாக ண்பிறவிகளாகப்) பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது.

66

அச் செய்யுள் இது:

'ஆசை யார்வமோ டைய மின்றியே ஓசை போய்உல குண்ண நோற்றபின் ஏசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த் தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்.

1. அண்ணை பேடி

அடிக்குறிப்புகள்