உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

189

கூறுகிறார்: “அகரம் தானும் இயங்கித் தனி மெய்களை இயக்குதற் சிறப்பான், முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான பின் வைக்கப்பட்டது.

இவ்வாறு, ஆண்பாலார்க்கன்றிப் பெண்பாலார்க்கு வீடுபேறு கிடையாது என்னும் தமது சமயக் கொள்கையை இலக்கண நூலிலும் வற்புறுத்துகிறார் இளம்பூரண அடிகள்.

66

“இந்திரன் தேவிமார்க்கும் இறைமைசெய் முறைமை இல்லை பைந்தொடி மகளிராவார் பாவத்தால் பெரிய நீரார்"

என்று கூறுகிறது, மேருமந்தர புராணம் (738 ஆம் செய்யுள்.)

அண்ணை' அலிகுரு டாதி யவர்களை

மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத் தெண்ணுநர் யாருளர்? எல்லா மமையினும் பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே

என்று கூறுகிறது சூளாமணிக்காவியம். (துறவு: 145 ஆம் செய்யுள்.)

66

'விதியினால் கதிகள் நான்கில் மேவிநின் றார்கள் தம்முள் மதியினால் பெரிய நீரார் மக்களாய் வந்து தோன்றி விதியினால் தானம் பூசை மெய்த்தவம் செய்து வீட்டைக் கதிகளைக் கடந்து செல்வார், காரிகை யார்கள் செல்லார்

என்பது மேருமந்தர புராணம். பெண்ணாகப் பிறந்தவர், இந்தப் பிறப்பிலே அவர்களுக்குக் கூறப்பட்ட முறைப்படி நடந்தால், மறுபிறப்பிலே தெய்வலோகத்திலே (ஆண்) தேவராகப் பிறந்து இன்பம் துய்த்துப் பிறகு மீண்டும் மண்ணுலகத்திலே மனிதப் பிறப்பிலே ஆண் மகனாகப் பிறப்பார்கள் என்றும்; அந்த ஆண்பிறப்பில் துறவு பூண்டு தவம் செய்வார்களாயின் வீடுபேறு அடைவார்கள் என்றும் மேருமந்தர புராணம் கூறுகின்றது.

“விரதசீ லத்த ராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து

அருகனைச் சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்புச் செய்து கருதிநற் கணவற் பேணும் கற்புடை மகளிர் இந்த உருவத்தின் நீங்கிக் கற்பத் துத்தம தேவர் ஆவார்.