உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தொல்காப்பியர் காலம்

‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவற் கில்லை’

ஓரை

என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் 45 ஆம் சூத்திரம். இதற்கு உரை கூறுகிற இளம்பூரண அடிகள், ஓரை என்பதற்கு முகுர்த்தம் என்று பொருள் கூறுகிறார். நச்சினார்க்கினியர் இராசி என்று பொருள் கூறுகிறார். எனவே ஓரை என்பதற்கு இராசி, முகுர்த்தம் என்னும் பொருள்கள் உண்டென்பது தெரிகின்றது. ஓரை என்னும் சொல்லுக்கு ‘மகளிர் விளையாட்டு ஆயம்’ என்னும் பொருளும் உண்டு. குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களிலே மகளிர் விளையாட்டுக் கூட்டத்துக்கு ஓரை என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளன. ‘ஓரை ஆயம் கூறக்கேட்டும்', 'ஓரை மகளிர் அஞ்சி யீர்ஞெண்டு கடலிற் பரிக்கும்' (குறும். 48 : 5, 401 : 3-4) ‘விளையாட டாயமோ டோரை யாடாது”, ‘ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்' - (அகம். 219 : 2) கோதை ஆயமொடு வண்டல் தைஇ, ஓரை ஆடினும் உயங்கும் நின்ஒளி'- (அகம். 60 : 10 - 11) 'விளையாட் டாயமொடு ஓரை ஆடாது' (நற். 68 : 1) 'தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து, ஓரையாயமும்'. (நற்றிணை 143 : 2 - 3) 'ஓரைஆயத்து ஒண்டொடி மகளிர்' (புறம். 176:1) என்று வருவன காண்க. எனவே ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர் விளையாட்டு ஆயம் என்றும், முகுர்த்தம் அல்லது இராசி என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன என்று அறிகிறோம்.

முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொருள் உள்ள ஓரை என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல் என்று சிலர் கருது கிறார்கள். மகளிர் ஆயம் என்னும் பொருளுடைய ஓரை என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கும்போது, முகுர்த்தம் அல்லது இராசி என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன என்று அறிகிறோம்.

முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொருள் உள்ள ஓரை என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல் என்று சிலர் கருதுகிறார்கள். மகளிர் ஆயம் என்னும் பொருளுடைய ஓரை