உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பெருகிற்று. கிரேக்கராகிய யவனக் கப்பலோட்டிகள் காவிரிப் பூம்பட்டினம், முசிரி முதலிய துறைமுகப்பட்டினங்களில் வந்து தங்கி யிருந்ததையும் அவர்கள் தமிழருடன் வாணிகம் செய்ததையும் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். மதுரை முதலிய ஊர்களிலும் யவன வீரர்கள் அரச ஊழியத்தில் அமர்ந்திருந்ததைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களினால் அறிகிறோம்.

புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரை யூரிலே மண்ணில் புதைந்து மறைந்துகிடந்த துறைமுகம் ஒன்றைச் சில ஆண்டுக்கு முன்னர் ஆர்க்கியாலஜி-இலாகா கண்டு அகழ்ந்தெடுத்தது. அது கி.பி. முதல் நூற்றாண்டில் யவனர் வந்து தங்கியிருந்து வாணிகம் செய்த துறைமுகம் என்று அங்குக் கிடைத்த பொருள்களினால் தெரியவந்தது.

இவ்வாறு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் நடைபெற்று வந்த கிரேக்க - தமிழ வாணிபம், மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடைபெறாமற் போயிற்று. கிரேக்கர் தமிழ் நாட்டுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த காலத்திலேதான் மேலே கூறப்பட்ட கிரேக்க மொழிச் சொற்கள் தமிழ் மொழியில் கலந்தன. ஆனால் ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல் தானா என்பதில் பலமான ஐயம் தோன்றுகிறது.

இதுபற்றி ஆராய்வதற்கு முன்னே, இச்சொல் கிரேக்கச் சொல் தான் என்று துணிந்து கொண்டு, அச்சொல்லை ஆண்டுள்ள தொல் காப்பியம் பிற்காலத்திலே எழுதப்பட்ட நூலாகும் என்று கூறுகிறவர் களின் கூற்றை ஆராய்ந்து பார்ப்போம்.

1

இராசி என்னும் பொருளுடைய ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து வடமொழியில் புகுந்து, பின்னர்த் தமிழ் மொழியில் நுழைந்தது என்றும், ஆகவே அச்சொல்லை வழங்கியுள்ள தொல் காப்பிய நூல் ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் முதல் முதலாகக் கூறியவர் கே. என். சிவராச பிள்ளையவர்கள் இவர் தாம் ஆங்கிலத்தில் 1932 ஆம் ஆ ண்டில் எழுதிய 'பழந்தமிழரின் சரித்திரகால அட்டவணை என்னும் நூலிலே, பிற்சேர்க்கை பதினைந்திலே, 'தொல்காப்பியத்தின்

1.

Arikamedu:An Indo Roman Trading - Station on the east coast of India. R. E. M. Wheeler, A. Ghosh and Krishna Deva. PP. 17-124, Anclent India. Number 2 July 1946.