உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

41

காலம்' என்னும் தலைப்பில் இச்செய்தியைக் கூறுகிறார். (இவர்இதிலே கூறுகிற வேறு காரணங்களை வேறு இடத்திலே ஆராய்வோம். இங்கு ஓரை என்பதை மட்டும் ஆராய்வோம்) சிவராசப் பிள்ளையவர்கள் ஓரை என்னும் சொல் காரணமாகத் தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண் டுக்குப் பிற்பட்ட நூல் என்று எழுதுவதை இங்குக் காட்டுவோம். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதன் கருத்து இது:

66

"கீழ்க்கண்ட தொல்காப்பிய சூத்திரம், தொல்காப்பியத்தின் காலத்தை உறுதியாக நிச்சயிக்க மிக உயர்ந்த சான்றாகும்.

ஒரு

'மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த வொழுக்கம் கிழவோர்க் கில்லை.

(களவியல் 135)

இந்தச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்னுஞ் சொல் தனக்கென்று ரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது இச்சொல், தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தினுடைய மேல்வரம்பை நிச்சயப்படுத்தத் துணை செய்கிறது. ஓரை என்னுஞ் சொல் உண்மையில் தமிழ்ச் சொல் அன்று. வடநாட்டு வானநூலோர் அதைக் கிரேக்கரிடமிருந்து கடனாகக் கொள்வதற்கு முன்பு அச்சொல் சமஸ்கிருத மொழியிலும் இல்லை. பிற்காலத்து இந்திய வானநூல் ஆராய்ச்சியானது கிரேக்க வானநூலின் உதவிபெற்று வளர்ந்தது என்று கோல்புரூக்கு (Colebrooke), விட்னி (Whitney), திபாட்டு (Thibaut), ஜகோபி (Jacobi), கீத்து (Keitte) முதலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். கயே என்னும் ஆசிரியர் (G.R. Kaye) தாம் எழுதிய 'இந்திய வான சாஸ்திரம்' என்னும் நூலில் (Memoris of the Archaeological Survey of India No.18) வேதகாலத்திலும் அதன் பிற் காலத்திலும் கிறிஸ்து சகாப்தத்தின் முதல் நூற்றாண்டு வரையில், இந்திய நாட்டு வானசாஸ்திரம் வெளிநாட்டுச் சார்பு இல்லாமல் இருந்தது என்று தெளிவாக விளக்கியுள்ளார். பிறகு அந்த வான சாஸ்திர வரலாற்று நூலிலே, மூன்றாவது வரிசை முறையில், கி.பி.320 முதல் 650 வரையில் உள்ள குப்த அரசர் காலத்தில் இந்திய வானசாஸ்திரம், கிரேக்க நாட்டாரின் முறைப்படியும் போக்குப்படியும் ஆராயப்பட்டது என்று கூறுகிறார். கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவரான ஆரியபட்டரும், கி.பி.6ஆம் நூற்றாண்டில் இருந்தவரான வராக மிகிரரும் கிரேக்க நாட்டு வானசாஸ்திர முறையை முதன்முதலாக ஏற்றுக்கொண்டவர்கள். இவர்கள் வானநூலைப் பற்றிய கிரேக்கச் சொற்கள் பலவற்றை ஏற்றுக் கொண்டார்கள்.