உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சமணசமயப் புகழ்பாக்கள்

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனாய் எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து

பத்துறு காவதம் பகைபசி பிணிநீங்க

உத்தமர்கள் தொழுதேத்த ஒளிவரை செலவினோய். எள்ளனைத்து மிடமின்றி எழில்மாண்ட பொன்னெயிலின் உள்ளிருந்த உன்னையே யுயிர்த்துணையென் றடைந்தோரை வெள்ளில்சேர் வியன் காட்டுள் உறைகென்றல் விழுமிதோ. குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு

கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரைப் பிணம்பிறங்கு பெருங்காட்டில் உறைகென்றல் பெருமையோ. விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய் மடத்தகைய மயிலணையார் வணங்கநின் னடைந்தோரைத் தடத்தரைய காடுறைக வென்பதுநின் தகுதியோ.

என வாங்கு,

எனைத்துணையை யாயினும்ஆகமற் றுன்கண் தினைத்தணையும் தீயவை யின்மையிற் சேர்தும் வினைத்தொகையை வீட்டுக வென்று.

வஞ்சிப்பா

கொடுவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தின் இணையரிமா னணையேறித்

துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி

எயில்நடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலால் செப்பியோன்

புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ

வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே.

(1)

(2)