உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

ஆசிரியத் தாழிசை

நீடற்க வினையென்று நெஞ்சி னுள்ளி

நிறைமலருஞ் சாந்தமொடு புகையும் நீவி

வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று

விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி

பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்

பகவன்றன் அடியிணையைப் பற்று நாமே.

இடையிடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை

போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன் தாதுறு தாமரை அடியிணை பணிந்தார் தாதுறு தாமரை அடியிணை பணிந்தார் தீதுறு தீவினை இலரே.

(3)

(4)

கலிவெண்பா

பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக் கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள் விண்ணாளும் வேந்தரா வார்.

(5)

வெண்கலிப்பா

நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும் தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு மாதுயரம் தீர்தல் எளிது

(6)

ஆசிரியப்பா

போது சாந்தம் பொற்ப வேந்தி

ஆதி நாதற் சேர்வோர்

சோதி வானம் துன்னு வாரே.

(7)

அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய

மணிதிகழ் அவிரொளி வரதனைப்

பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.

(8)