உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

நேரிசை யாசிரியப்பா

உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழல் பொற்புடை ஆசனம் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை

அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து துன்னிய மாந்தர தென்ப

பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.

வண்ணம்

தாழி யோங்குமலர்க் கண்ணவர் தண்ணடி

பாழி யோங்கு புனலார் பழையாற்றுள்

காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து

(9)

வாழி என்று வணங்க வினைவாரா.

(10)

பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்

பணியாய் மணியார் அணைமேல் பணியா ஒருமூ வுலகும் கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா அணியார் கமலத் தலரா சனனே அறவா ழியனே. (11)

ஆதிநாதர்

பாத மூலம் நீதியாய் நின் றோது நெஞ்சே

(12)

பந்தம் நீக்குறில்

அந்த மில்குணத்

தெந்தை பாதமே

சிந்தி நெஞ்சமே

(13)

திரித்து வெங்கயம்

உரித்து நல்லறம்

விரித்த வேதியர்க்

குரித்தென் உள்ளமே.

(14)

209