உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தொல்காப்பியர் காலம்

பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் வச்சிர

நந்தியின் திரமிள சங்கமும்

இடைச்சங்க காலத்திலும் கடைச்சங்க காலத்திலும் தொல்காப்பியம் இலக்கண நூலாக இருந்தது என்பதைப் பழைய தமிழ் இலக்கியங்களி லிருந்து அறிகிறோம். தொல்காப்பியம் கி.மு.8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் அன்று என்பதை முன்னரே விளக்கினோம். சிலர் கி.பி. ஐந்தாம் நூற்ாண்டில் தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் கூடும் என்று கூறுகின்றனர். அவர்கள் கூற்றைத் தக்க சான்றுகாட்டி மேலே மறுத்துள்ளோம்.

ஆனால்

கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் ஜைன முனிவர் மதுரையில் ஒரு ‘திரமிள சங்கத்தை’ அமைத்ததைச் சுட்டிக்காட்டி அந்தச் சங்கத்தில் தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இது பற்றி இங்கு ஆராய்வோம்.

திகம்பர தரிசனம் என்னும் ஜைன சமய நூலிலே அதை எழுதிய தேவசேனர் என்பவர், பூஜ்யபாதரின் சீடராகிய வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 525-இல் (கி.பி. 470-இல்) தென் மதுரையிலே திராவிட சங்கத்தை நிறுவினார் என்று கூறுகிறார்.'

‘ஸ்ரீ பூஜ்ஜ பாதஸீஸோ தாவிட ஸங்கஸ்ஸ காரகோ விஷ்டோ நாமேன வஜ்ஜநந்தீ பாஹுணவேதீ மஹாஸத்தோ'

‘பம்சஸயே சவீஸே விக்ரமார்யஸ்ஸ மரண பத்தஸ்ஸ தக்கிண மஹுராஜாதோ தாவிட ஸங்கோ மஹாமஹோ'.

இந்தச் செய்தியைக்கொண்டு திரு.எஸ். வையாபுரி பிள்ளை யவர்கள், "வச்சிர நந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470-இல் அமைக்கப்பட்டது. தொல்காப்பியம் அந்தச் சங்கத்தில் வெளிவந்த நூலாக இருக்கலாம்” என்றும்,

1. Journal of Bombay Branch of Royal Asiatic Society, vol. XVII Page 74.