உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

53

விட்ட து. ஆகவே, வச்சிநந்தி முனிவர், கி.பி. 470 -இல் நந்திகணத்தை (நந்தி சங்கத்தை) இரண்டாகப் பிரித்து இரண்டாவது பிரிவுக்குத் திரமிள சங்கம் (தமிழ்நாட்டுச் சங்கம், தமிழ் ஜைனர் சங்கம்) என்று பெயர் கொடுத்தார். நந்தி சங்கத்திலிருந்து திரமிள (திராவிட) சங்கம் ஏற்பட்டது என்பதை மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது:

‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸதி அருங்களா அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர வாராஸி பாரகைஹி’3

'நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வய பிரிவு' என்பது இதன் பொருள்.

இந்தத் திராவிட ஜைன முனிவர் சங்கத்தின் கொண்டகுண்டான் வயம் என்னும் பிரிவில் புஸ்தக கச்சை என்னும் உட்பிரிவைச் சேர்ந்த முனி பட்டாரகர் என்னும் ஜைன முனிவரைக் கர்நாடக நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.

4

திரமிள சங்கத்து அருங்கலான்வயப் பிரிவைச் சேர்ந்த சாந்தி முனி என்பவரை இன்னொரு சாசனம் கூறுகிறது.5

திரமிள சங்கத்து அருங்கலான்வயத்து ஸ்ரீபால திரைவித்யர் என்னும் முனிவரை மற்றொரு சாசனம் கூறுகிறது

6

திராவிட சங்கத்துத் தவுளகணத்து இருங்கலான் வயப் பிரிவைச் சேர்ந்த குணசேன பண்டிதரை இன்னொரு சாசனம் கூறுகிறது.

7

இதிலிருந்து, பாண்டியர் தமிழை வளர்ப்பதற்கு மதுரையில் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் வேறு என்பதும், வச்சிர நந்தி ஜைன சமயத்தை வளர்ப்பதற்காக மதுரையில் நிறுவிய நந்தி சங்கத்தின் பிரிவாகிய திரமிள சங்கம் வேறு என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறதல்லவா? இது சாதாரண அறிவுடையவருக்கும் நன்கு விளங்குகிறது. இதை உணராமல் மொழிவளர்ச்சிக்காக ஏற்பட்ட பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தையும் சமய வளர்ச்சிக்காக வச்சிரநந்தி அமைத்த திரமிள ஜைன சங்கத்தையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது

3.

Epigraphia Carnatica Vol. V. Hassan Tq. 131 Arisikera Tq.

4. P.61 Mediaeval jainism. Bhaskar Anand Saletore.

5.

6.

P.66. do do do.

Epigraphia Carnatica V. Hn. 119. P. 35

7. Epigraphia Carnatica IX. Cg. 35,37, pp. 173-174.