உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சிலப்பதிகாரமும் பங்களரும்*

சிலப்பதிகாரத்திலே பங்களர் என்னும் நாட்டினர் கூறப்படு கின்றனர். அந்தப் பங்களர் என்பவரைப்பற்றிய ஆராய்ச்சிதான் இக் கட்டுரை. பங்களர் என்னும் பெயரை ஆராய்ந்து சில அறிஞர்கள் ஒருவிதக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். பங்களர் என்பவர் பங்காள (வங்காள) நாட்டவர் என்றும், பங்களர் என்னும் பெயர் வழங்கப்பட்டது பிற்காலத்தில் என்றும், ஆகவே இச்சொல்லை வழங்குகிற சிலப்பதிகாரம் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்றும் இந்த ஆராய்ச்சிக்காரர்கள் முடிவு கூறியுள்ளனர்.

இப்படிக் கூறியவர்கள் சென்னை, வங்காளம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் ஆவர். இவர்கள் ச. வையாபுரிப்பிள்ளை, K.A. நீலகண்ட சாஸ்திரி, V.R. இராமச் சந்திர தீட்சிதர், ஹேமசந்திர ராய் சவுத்திரி என்பவர்கள். இவர்களில் முதல் மூவரும் சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள். ராய் சவுத்திரி, வங்காளப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்.

சிலப்பதிகாரம் காட்சிக் காதையிலே, செங்குட்டுவ னுடைய போர்க்கள வெற்றிகளைக் கூறுகிற இடத்திலே, அமைச்சனான வில்லவன் கோதை செங்குட்டுவன் வென்ற நாட்டவர் பெயர்களைக் கூறுகிறான். அப்பெயர்களில் பங்களர் என்னும் பெயரையும் கூறுகிறான். இப் பெயரைக் கூறுகிற சிலப்பதிகாரப் பகுதி இது:

"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்

வடவாரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்

கடலை வேட்டமென் கட்புலம் பிரியாது" (காட்சிக் காதை 156-159)

6

இதில் வருகிற பங்களர் என்னும் சொல்லை ஆராய்ந்து, மேற்சொன்ன நான்கு பேராசிரியர்களும், பங்களர் என்னும் சொல் பிற்காலத்தில் வழங் கிய சொல், இந்தச் சொல்லை வழங்குகிற சிலப்பதிகாரமும் பிற்காலத்து நூல் என்று எழுதியுள்ளனர். இவர்கள், இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார்கள்: * கலைக்கதிர். ஆகஸ்டு 11:8, 1959.