உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

திரு.எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள், சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் என்பதற்குப் பங்களர் என்னும் சொல்லையும் ஒரு காரணமாகக் கூறுகிறார். "வங்க தேசத்தினருக்குப் பங்களர் என்பது பிற்காலப் பெயர். இதுவும் இக்காவியத்தில் (சிலப்பதிகாரத்தில்) காணப்படுகிறது” என்று “இலக்கிய மணிமாலை” என்னும் நூலில் (பக்கம் 138) எழுதுகிறார். மேலும் தமது "தமிழ்மொழி தமிழ்இலக்கிய வரலாறு” என்னும் ஆங்கில நூலிலும் இவ்வாறு ஏழுதுகிறார்:

"A few countries like Karnataka and Bengal which were unknown to the Tamils of the Sangam Period are mentioned."

(P.148. History of Tamil Language and Literature)

ஆகவே, சிலப்பதிகாரம் கி.பி. 500க்குப் பிறகு இயற்றப்பட்டது என்பது பிள்ளையவர்கள் கருத்து.

திரு. K.A. நீலகண்ட சாஸ்திரியும் இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார்: "பங்காள தேசத்து மக்களைப் பங்களர் என்னும் சொல்லால் குறிப்பிடுவதும் இந்நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டது என்பதற்குச் சான்றாகும்.” ("The form Bangalar for the people of Bengal.... are also evidences of late composition" (University of Ceylon Review Vol. VII 1949. p.21 - 27)

சென்னைப் பல்கலைக் கழகத்துச் சரித்திர ஆசிரியராக இருந்த திரு.வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும், தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள “சிலப்பதிகாரம்” என்னும் ஆங்கில நூலில், 289- ஆம் பக்கத்தில், மூன்றாவது அடிக் குறிப்பில் இதே கருத்தை எழுது கிறார். “பங்களர் என்பது பங்களா நாட்டு மக்களைக் குறிப்பிடுகிறது." (‘“The Bangalar are probabaly the people of Bengal” என்று எழுதுகிறார்)

கல்கத்தாப் பல்கலைக் கழகத்து இந்திய சரித்திர ஆசிரியராகிய ஹேமசந்திர ராய் சவுத்திரி என்பவரும், இவர்கள் கூறும் கருத்தையே கூறுகிறார்: இவர் ஆங்கிலத்தில் கூறியதன் கருத்து இது:

66

“பங்களர் என்னும் பெயரும் இதில் (சிலப்பதிகாரத்தில்) கூறப்படு கிறது. வங்கம் என்னும் பழைய பெயர் சமஸ்கிருத காவியங்களிலும் தர்ம சூத்திரங்களிலும், நாகார்ச்சுன கொண்ட' மேக ரவுளி சாசனங் களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வங்களர் என்னும் பெயர் நிச்சயமாகப் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் இப்பெயர் சாசனங்களில் காணப்பட வில்லை.